பொது செய்தி

தமிழ்நாடு

இளம் மழலையர் பள்ளிகளுக்கு அரசு உதவ வேண்டும்; தமிழ்நாடு பிளே ஸ்கூல் அசோசியேஷன் வலியுறுத்தல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மதுரை : கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இளம்மழலையர் பள்ளிகளுக்கு அரசு உதவ வேண்டும் என மதுரையில் தமிழ்நாடு பிளேஸ்கூல் அசோசியஷன் வலியுறுத்தியுள்ளது.அதன் மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன் கூறியதாவது: கடந்தாண்டு மார்ச் முதல் இன்று வரை தமிழகத்தில் இளம்மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எவ்வித வருவாயுமின்றி பள்ளி கட்டடங்களுக்கு வாடகை கொடுக்க முடியாமல்,

மதுரை : கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இளம்மழலையர் பள்ளிகளுக்கு அரசு உதவ வேண்டும் என மதுரையில் தமிழ்நாடு பிளேஸ்கூல் அசோசியஷன் வலியுறுத்தியுள்ளது.

அதன் மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன் கூறியதாவது: கடந்தாண்டு மார்ச் முதல் இன்று வரை தமிழகத்தில் இளம்மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எவ்வித வருவாயுமின்றி பள்ளி கட்டடங்களுக்கு வாடகை கொடுக்க முடியாமல், ஆசிரியைகளுக்கு சம்பளம் வழங்க முடியாமல் நிர்வாகங்கள் கஷ்டப்படுகின்றன. இருப்பினும் வாடகை, சம்பளத்தை முறையாக வழங்கி வருகிறோம்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 40 உள்ளிட்ட மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்மழலையர் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் வட்டார கல்வி அலுவலர்கள் இளம்மழலையர் பள்ளிகளின் தாளாளர்களுக்கு கூட்டம் நடத்தி சில தகவல்களை கேட்கின்றனர். கல்வி அதிகாரிகள் கேட்கும் தகவல்களை வழங்க பள்ளி நிர்வாகங்கள் தயாராகவுள்ளன. ஆனால் சில அதிகாரிகள் பள்ளிகளை மூடி விடுவேன் என அதிகார தோரணையில் பேசி வருவதாக புகார்கள் எழுகின்றன.

ரூ.7500 க்குள் பெற வேண்டிய பள்ளி அங்கீகாரம் இன்று ரூ.ஒருலட்சம் செலவழித்தாலும் பெற முடிவதில்லை. பள்ளிகள் திறந்த பிறகு அங்கீகாரம் பெற கால அவகாசம் வழங்க வேண்டும். பெரும்பாலான ப்ளேஸ்கூல் நடத்துவது பெண்கள். எனவே இளம்மழலையர் பள்ளிகள் மேம்பாட்டுக்கு அரசு உதவ வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X