பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் புத்தாக்கப் பயிற்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கடலுார்-பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து, கடலுாரில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழ்நாடு அரசின் உத்தரவு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைபடி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலமாக கடலுார் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு

கடலுார்-பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து, கடலுாரில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழ்நாடு அரசின் உத்தரவு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைபடி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலமாக கடலுார் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட்டது.கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் பேசுகையில், அரசின் பல திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு குறைவின்றி சென்றடைய விற்பனையாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கனிவாக நடக்க வேண்டும். ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். விற்பனையாளர்கள் இப்பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தெரிவித்தார்.பயிற்சி முகாமில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம். காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி வட்டார இடங்களில், துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்) ஜெகத்ரட்சகன், கடலுார் சரக துணைப்பதிவாளர் சண்முகம். சிதம்பரம் சரக துணைப்பதிவாளர் துரைசாமி, விருத்தாசலம் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் யோகவிஷ்ணு, பயிற்சி நிலைய முதல்வர் நாகலட்சுமி, கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் மஞ்சுளா பங்கேற்றனர். பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X