சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருப்பம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 8 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 4 பேரிடம் விசாரணை நடக்கிறது. பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் பைனான்சியர் பரமசிவம் 30, பணத்தை இழந்தது அம்பலமாகியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்துார் நத்தத்துபட்டி பரமசிவம். பைனான்ஸ் தொழில் செய்யும் இவரிடம் மதுரை சாமிக்கண்ணு ரூ.5 லட்சம் கேட்டார். ஆக., 24ல்

மதுரை : மதுரையில் போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 8 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 4 பேரிடம் விசாரணை நடக்கிறது. பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் பைனான்சியர் பரமசிவம் 30, பணத்தை இழந்தது அம்பலமாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்துார் நத்தத்துபட்டி பரமசிவம். பைனான்ஸ் தொழில் செய்யும் இவரிடம் மதுரை சாமிக்கண்ணு ரூ.5 லட்சம் கேட்டார். ஆக., 24ல் பணத்துடன் வந்தவரிடம் சாமிக்கண்ணு கூட்டாளிகள் போலீஸ் போல் நடித்து வழிப்பறி செய்தனர். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதுதொடர்பாக மதுரை பரவை முருகபாண்டி 35, துாத்துக்குடி ஒட்டப்பிடாரம் மதன்குமார் 19, கோவில்பட்டி சுடலைமணி 31, துாத்துக்குடி சதீஷ்குமாரிடம் 31, விசாரித்து வருகின்றனர்.

மேலும் அலங்காநல்லுார் சஸ்பெண்ட் போலீஸ்காரர் ஜெயராமன், சிவகாசி முருகன், திருப்பாச்சேத்தி ராஜேஷ், துாத்துக்குடி தாளமுத்து நகர் பாலசுப்பிரமணி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை தேடி வருகின்றனர்.போலீசார் கூறியதாவது: இக்கும்பல் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து வந்துள்ளனர். பரமசிவத்திடம் முருகபாண்டி தன்னை சாமிக்கண்ணு என அறிமுகப்படுத்தி பேசியுள்ளார்.

ஆரம்பத்தில் சில ஆயிரம் ரூபாயை கொடுத்த பரமசிவத்திடம் பணத்தை இரட்டிப்பாக்கி தந்து நம்ப வைத்துள்ளனர். இதன் பிறகே ரூ.5 லட்சத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் வந்தவரிடம் போலீஸ் போல் நடித்து வழிப்பறி செய்துள்ளனர்.பணத்தை இரட்டிப்பாக்குவது குற்றம் என்பதால் பரமசிவம் போலீசில் புகார் செய்யமாட்டார் என நினைத்துள்ளனர். ஆனால் அவர் புகார் தெரிவித்ததால் மாட்டிக்கொண்டனர்.

இதேபோல் பலரிடம் மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பயந்து போலீசில் புகார் செய்யவில்லை. இதேபோன்று நாகமலைபுதுக்கோட்டையில் பேக் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக இன்ஸ்பெக்டர் வசந்தி உட்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் முருகபாண்டி உள்ளிட்டோருக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X