ஓ.பி.ஆர்., நினைவு நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.ஆர்., நினைவு நாள் விழா

Added : ஆக 27, 2021
Share
வடலுார்--வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் வள்ளலார் குருகுலத்தை உருவாக்கிய ஓ.பி. ஆர்.,நினைவு நாள் விழா நடந்தது.வடலுாரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவி வள்ளலார் குருகுலத்தை உருவாக்கிய ஓ.பி.ஆர்., 51வது ஆண்டு நினைவு நாள் விழா நடந்தது. ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், ஓ.பி.ஆர் உருவப்படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பெற்றோர்

வடலுார்--வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் வள்ளலார் குருகுலத்தை உருவாக்கிய ஓ.பி. ஆர்.,நினைவு நாள் விழா நடந்தது.வடலுாரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவி வள்ளலார் குருகுலத்தை உருவாக்கிய ஓ.பி.ஆர்., 51வது ஆண்டு நினைவு நாள் விழா நடந்தது. ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், ஓ.பி.ஆர் உருவப்படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம் சுத்த சன்மார்க்க மடலை வெளியிட பள்ளி தாளாளர் செல்வராஜ் பெற்றுக் கொண்டார். முன்னாள் வி.ஏ.ஓ. நந்தகோபால் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் தலைமையாசிரியர் ஜெயபால் இறைவணக்கம் பாடினார். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் லதா ராஜா வெங்கடேசன் தொகுத்து வழங்கினார். ராஜா வெங்கடேசன், மனித உரிமைகள் கழக மாநில செயலாளர் கண்ணன், ஆசிரியர் செந்தில்குமார், பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X