தமிழ்நாடு

அதிகரிப்பு: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைவாழ்வாதாரம் பாதிப்பு எதிரொலி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு எதிரொலியாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆன் லைன் மற்றும் கல்வி தொலைக் காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு
 அதிகரிப்பு: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைவாழ்வாதாரம் பாதிப்பு எதிரொலி

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு எதிரொலியாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆன் லைன் மற்றும் கல்வி தொலைக் காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததுஅதன்படி, 2021-2022ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 14ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

எனினும் வரும் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதை பெருமையாக கருதிய பெற்றோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனால் தனியார் பள்ளிகளில் பயின்ற தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர்.இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் அரசு துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல ்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,433 ஆகும்.2020-2021ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 256 ஆகும். 2021-2022ம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 566 ஆகும். இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 18 ஆயிரத்து 310 கூடுதலாகும். இது குறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கால் தினக்கூலித் தொழிலாளர்கள், தனியார் துறைகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி தனியார் பள்ளியில் பயின்ற குழந்தைகளை மாற்றுச் சான்றிழை பெற்று அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர்.அரசு உதவிப் பெறும் பள்ளிகளை விட மெட்ரிக் பள்ளிகளில் இருந்தே அதிகளவில் மாணவர்கள் சேர்ந்தனர். ஐந்தாம் வகுப்பு முதல், 7ம் வகுப்பு வரை அதிகளவில் சேர்க்கை நடந்தது. சேர்க்கை பணி தொடர்ந்து நடக்கிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X