பொது செய்தி

தமிழ்நாடு

பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சன்னதியும் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது. பூலோகநாதருக்கு

நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சன்னதியும் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது. பூலோகநாதருக்கு சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பூலோகநாதர் அருள்பாலித்தார். புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதரும் அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதியும் அருள்பாலித்தனர். பூஜைகளை குமார், முருகானந்தம், ஹரிபிரபு குருக்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X