பொது செய்தி

இந்தியா

சுப்ரமண்யபுரா ஏரி சரியான நிர்வகிப்பின்றி பாழ்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
உத்தரஹள்ளி-உத்தரஹள்ளி வார்டில் உள்ள, சுப்ரமண்யபுரா ஏரி, இரண்டு ஆண்டுகளாக சரியான நிர்வகிப்பின்றி, செடி, கொடிகள் வளர்ந்து பாழாகியுள்ளது. சட்டவிரோத சம்பவங்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது.பெங்களூரில் மொத்தம் 210 ஏரிகள் உள்ளன. ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை, மாவட்ட நிர்வாகம், பெங்களூரு மாநகராட்சி ஒருங்கிணைந்து மேற்கொண்டன.மாநகராட்சிக்கு உட்பட்ட, 205 ஏரிகளில் 65

உத்தரஹள்ளி-உத்தரஹள்ளி வார்டில் உள்ள, சுப்ரமண்யபுரா ஏரி, இரண்டு ஆண்டுகளாக சரியான நிர்வகிப்பின்றி, செடி, கொடிகள் வளர்ந்து பாழாகியுள்ளது. சட்டவிரோத சம்பவங்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது.பெங்களூரில் மொத்தம் 210 ஏரிகள் உள்ளன. ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை, மாவட்ட நிர்வாகம், பெங்களூரு மாநகராட்சி ஒருங்கிணைந்து மேற்கொண்டன.மாநகராட்சிக்கு உட்பட்ட, 205 ஏரிகளில் 65 ஏரிகளின் அபிவிருத்தி பணிகள் முடிந்துள்ளது. 26 ஏரிகளின் பணிகள் நடந்து வருகிறது. மற்ற ஏரிகளின் பணிகள் பாக்கியுள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், உத்தரஹள்ளி வார்டில் உள்ள, சுப்ரமண்யபுரா ஏரி அபிவிருத்தி பணிகள் நடந்தது. ஏரியை சுற்றிலும் வேலி, கற் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அதன்பின் பணிகளை பாதியில் நிறுத்தப்பட்டது. பணிகளை கிடப்பில் போட்டதால், ஏரி பாழாகியுள்ளது.ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது என்றாலும், தண்ணீரே தெரியாத அளவுக்கு, பாசி, செடி கொடிகள் மறைத்துள்ளது. ஏரி வளாகத்தை சுற்றிலும், புதர் மண்டிக்கிடக்கிறது. ஏரி வளாகத்தை சுற்றிலும், நடைபயிற்சி செய்வோருக்காக கட்டப்பட்டிருந்த பாதை, முழுவதுமாக சீர் குலைந்துள்ளது.சுற்றுப்புற வீடுகள், குடிசைவாசிகள் குப்பையை ஏரியில் கொட்டுகின்றனர். கனமழை பெய்தால், ஏரியிலிருந்து பாம்பு, தேள், தவளை போன்றவை வீட்டுக்குள் நுழைகிறது. கனமழை பெய்யும் போது, மக்கள் பயத்துடனேயே நாட்களை தள்ள வேண்டியுள்ளது. ஏரியை அபிவிருத்தி செய்யும்படி, உத்தரஹள்ளி மக்கள் வலியுறுத்துகின்றனர்.பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சுப்ரமண்யபுரா ஏரி நிலத்தை ஆக்ரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த, 99 வீடுகள் இடிக்கப்பட்டது. இவர்களில் சிலருக்கு, குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.மற்றவர்கள் வேறு இடங்களில் வீடு கட்டிக்கொண்டனர். ஆனால் சிலர் ஏரியை சுற்றிலும் உள்ள வேலியை முறித்து, வாகனங்களை நிறுத்துகின்றனர். இதை அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X