பணம் கேட்டு மிரட்டிய, 'யூடியூப்' சேனல் செய்தியாளர் உட்பட, ஆறு பேர் கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பெங்களூரு-தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய, 'யூடியூப்' சேனல் செய்தியாளர் உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக, டி.சி.பி., தர்மேந்திர குமார் மீனா, நேற்று கூறியதாவது:மூன்று நாட்களுக்கு முன், தனியார் நிறுவன வாகனத்தில், இரண்டு ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த மர்மகும்பல், ஊழியர்களை மிரட்டி அதே வாகனத்தில்

பெங்களூரு-தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய, 'யூடியூப்' சேனல் செய்தியாளர் உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக, டி.சி.பி., தர்மேந்திர குமார் மீனா, நேற்று கூறியதாவது:மூன்று நாட்களுக்கு முன், தனியார் நிறுவன வாகனத்தில், இரண்டு ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த மர்மகும்பல், ஊழியர்களை மிரட்டி அதே வாகனத்தில் கடத்தி சென்றனர். பின் நிறுவன உரிமையாளர் சீனிவாசை, மொபைலில் தொடர்பு கொண்டு, 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஊழியர்களை கொலை செய்வோம். வாகனமும் கிடைக்காது என, மிரட்டியுள்ளனர்.பீதியடைந்த சீனிவாஸ், மஹாலட்சுமி லே -- அவுட் போலீஸ் நிலையத்தில், புகார் செய்தார். போலீசாரும் விசாரணையை துவங்கினர். போலீசார் தேடுவது தெரிந்தவுடன், ஊழியர்களை மெஜஸ்டிக் அருகில் இறக்கி விட்டு தப்பியோடினர்.விசாரணை நடத்திய போலீசார், 'யூடியூப்' சேனல் செய்தியாளர் சந்தோஷ், ரவுடி குள்ள ரமேஷ், துர்கேஷ், ஹரிஷ், விவேக், அரவிந்த் ஆகியோரை கைது செய்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X