பொது செய்தி

இந்தியா

நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் பண்டிப்பூர் காப்பகத்தில் இடையூறு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பெங்களூரு-'கர்நாடகாவில் பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பண்டிப்பூர் புலிகள் காப்பகம், தேசிய அளவில் முக்கியம் வாய்ந்தது. இதன் வழியாக, என்.எச்., 181; என்.எச்., 766 தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பது, வனவிலங்குகளின் பாதுகாப்பை

பெங்களூரு-'கர்நாடகாவில் பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பண்டிப்பூர் புலிகள் காப்பகம், தேசிய அளவில் முக்கியம் வாய்ந்தது. இதன் வழியாக, என்.எச்., 181; என்.எச்., 766 தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பது, வனவிலங்குகளின் பாதுகாப்பை குறைத்துள்ளது. விபத்துகள் அதிகமாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் கடப்பதால், வனவிலங்களுக்கு இடையூறு ஏற்படும் நிலையில், தற்போது, என்.எச்., 181 சாலையை மேலும் விரிவுபடுத்த நெஞ்சாலையத்துறை, மத்திய அமைச்சகத்தில் அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நெடுஞ்சாலைத்துறை, மேலுகமனஹள்ளி முதல் கேக்கனஹள்ளி வரையிலுள்ள என்.எச்., 181 சாலையை மேலும் 13 கி.மீ., வரை விரிவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் வைத்துள்ளது.இதற்கு அனுமதி வழங்குவதற்கு முன், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ஏற்படும் விளைவுகளையும் அமைச்சகம் கவனிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.வனவிலங்கு உயிரியலாளர்கள் கூறியதாவது:தேசிய விலங்கின் காப்பகமாக உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகம் முக்கியத்துவம் பெற வேண்டும். புலிகள் மட்டுமின்றி, யானைகள், பறவைகள், விலங்கினங்களின் பகுதியாகவும் உள்ளது.தற்போது நெடுஞ்சாலைத்துறை, காப்பகத்தின் 24 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்து, சாலையை விரிவுபடுத்த அனுமதி கோரியுள்ளது.வனவிலங்குகள் சாலையை கடக்கும் சுற்றுலா பயணிகளால் இடையூறு ஏற்பட கூடாதென ஏற்கனவே உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை இதுபோன்ற விரிவாக்கப்பணிகளை முன்வைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை பாதிக்கும் வகையில்உள்ளது.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X