இந்தியா

..

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தமிழகத்தின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகதாதுவில் அணை கட்டுவதில் மும்முரமாக உள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, டில்லியில் நேற்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம், சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.பெங்களூரு மாநகரின் குடிநீருக்காகவும், மின்சார உற்பத்திக்காகவும் என்று கூறி,
..

தமிழகத்தின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகதாதுவில் அணை கட்டுவதில் மும்முரமாக உள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, டில்லியில் நேற்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம், சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.பெங்களூரு மாநகரின் குடிநீருக்காகவும், மின்சார உற்பத்திக்காகவும் என்று கூறி, மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு, புதிய அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.சந்திப்புஇதற்கான விரிவான அறிக்கை தயாரித்து, மத்திய இயற்கை வளம், சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், தமிழகம் சார்பில் தொடர்ந்து எதிர்க்கப்படுகிறது.ஆனாலும், 'யார் தடுத்தாலும் அணை கட்டியே தீருவோம்' என கர்நாடகா விடாப்பிடியாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் டில்லி சென்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.

அப்போது, மேகதாதுவில் அணையை கட்டுவதற்கு விரைவில் அனுமதி தரும்படி முதல்வர் வலியுறுத்தினார்.இதற்கிடையில், டில்லி சாணக்கியபுரி பகுதியில் அமைந்துள்ள கர்நாடகா பவனில், சட்ட வல்லுனர்களுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. எல்லைக்குள் வராதுமாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், சுகாதார துறை அமைச்சர் சுதாகர், நீர்ப்பாசன துறை கூடுதல் தலைமை செயலர் ராகேஷ் சிங், மாநில அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் உட்பட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.மேகதாது திட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை எப்படி தீர்ப்பது; உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை எப்படி எதிர்கொள்வது உட்பட கிருஷ்ணா, காவிரி, மஹதாயி நதி நீர் பிரச்னை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

நீண்ட நேர ஆலோசனைக்கு பின், முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, எத்தகைய விஷயங்களை முன் வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது, சம்பந்தப்பட்ட எல்லைக்குள் வராது என்பதை நீதிமன்றத்தில் தெரியப்படுத்துவோம்.மாநில அரசியல்காவிரி, வைகை, குண்டாறு ஆகிய மூன்று ஆறுகளை இணைக்க தமிழக அரசு திட்டம் மேற்கொண்டுள்ளது. அது சட்டத்துக்கு புறம்பானது என்பதால், அத்திட்டத்தை எதிர்த்து கர்நாடகா சார்பில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளோம்.அவ்வழக்கை விரைவில் விசாரிக்கும்படி மனு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

இப்படி தொடர்ந்து மேகதாது விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் பொம்மை தீவிரமாக உள்ளார். அவரின் இந்த செயல், அந்த மாநிலத்தின் அரசியல் நிலைமைக்கு ஏற்றது தான். புதிய முதல்வரான அவர், மேகதாது குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளார் என்ற பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, தீவிரமாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார் என கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X