துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் அமைகிறது ரவுண்டானா மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் அமைகிறது ரவுண்டானா மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

Added : ஆக 27, 2021
Share
-ஓ.எம்.ஆரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் சந்திப்பில், 240 கோடி ரூபாயில் இரண்டு ரவுண்டானா மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.சென்னையில், கிழக்கு கடற்கரை சாலையான, இ.சி.ஆர்., மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையான, ஒ.எம்.ஆர்., ஆகியவை முக்கிய சாலைகளாக உள்ளன.இ.சி.ஆரில், பொழுது போக்கு மையங்களும், ஒ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி

-ஓ.எம்.ஆரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் சந்திப்பில், 240 கோடி ரூபாயில் இரண்டு ரவுண்டானா மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னையில், கிழக்கு கடற்கரை சாலையான, இ.சி.ஆர்., மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையான, ஒ.எம்.ஆர்., ஆகியவை முக்கிய சாலைகளாக உள்ளன.இ.சி.ஆரில், பொழுது போக்கு மையங்களும், ஒ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. பாண்டிச்சேரியில் இருந்து, சென்னை நோக்கி வர, இந்த இரு சாலைகளையும் பயன்படுத்துவதால், சென்னையின் நுழைவு வாயிலாக உள்ளது. ஓ.எம்.ஆரில், மத்திய கைலாஷ் சந்திப்பு முதல், சோழிங்கநல்லுார் சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.இந்த இடைப்பட்ட துாரத்தில், மத்திய கைலாஷ், இந்திரா நகர், டைடல் பார்க், துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் சிக்னல்கள் முக்கிய சந்திப்பாக உள்ளன.போக்குவரத்து நெரிசலை குறைக்க, இந்த ஐந்து சிக்னல்களிலும் மேம்பாலங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய கைலாஷ் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு மேம்பாலம் கட்டப்பட உள்ளதாகவும், ஓரிரு மாதங்களில் பணிகள் துவங்கும் எனவும், தகவல் வெளியாகியுள்ளது. இந்திரா நகர், டைடல்பார்க் சந்திப்பில், மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதை தொடர்ந்து, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் சந்திப்பில், ரவுண்டானா மேம்பாலம் கட்ட, இத்துறை முடிவு செய்து உள்ளது.மொத்தம், 240 கோடி ரூபாயில், இந்த இரண்டு ரவுண்டானா மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு, சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.எம்.ஆர்., மைய பகுதியில், மெட்ரோ ரயில் பாதைக்கு மேம்பாலம் அமைய உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலையானதால், மெட்ரோ ரயில் மேம்பாலம் மற்றும் ரவுண்டானா மேம்பாலம் இரண்டையும், ஒரே நேரத்தில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.192 கோடிரவுண்டானா மேம்பாலம் கட்டியபின், துரைப்பாக்கம் சிக்னலில், ஓ.எம்.ஆரில் தற்போது செல்வது போல் வாகனங்கள் செல்லும். ஓ.எம்.ஆரில் இருந்து, இ.சி.ஆர்., மற்றும் ரேடியல் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், ரவுண்டானா மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். அது போல், ரேடியல் சாலை மற்றும் இ.சி.ஆரில் இருந்து, இதர சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், மேம்பாலம் ஏறி செல்ல வேண்டும். துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து, இ.சி.ஆர்., இணைப்பு சாலை, 192 கோடி ரூபாயில், தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.மேம்பாலம் ஏறி செல்லலாம்சோழிங்கநல்லுார் சிக்னலிலும், அதேபோல், ஓ.எம்.ஆர்., நோக்கி செல்லும் வாகனங்கள் தற்போதைய நிலை தொடரும். ஓ.எம்.ஆரில் இருந்து, கே.கே.,சாலை மற்றும் மேடவாக்கம் சாலை நோக்கி செல்பவர்கள், ரவுண்டானா மேம்பாலம் ஏறி செல்ல வேண்டும். அதுபோல், கே.கே.,சாலை மற்றும் மேடவாக்கம் சாலையில் இருந்து, இதர சாலைகளுக்கு செல்பவர்களும், மேம்பாலம் ஏறி செல்ல வேண்டும்.52 அடி உயரத்தில் மெட்ரோ வழித்தடம்ஓ.எம்.ஆர்., மைய பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் சந்திப்பில், ரவுண்டானா மேம்பாலம், சாலை மட்டத்தில் இருந்து, 26 அடி உயரத்திலும், மெட்ரோ ரயில் வழித்தடம், 52 அடி உயரத்திலும் அமைகிறது.

- -நமது நிருபர்-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X