பொது செய்தி

தமிழ்நாடு

பூங்காக்கள் பராமரிப்பில் முறைகேடு? பல்லாவரம் நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை--பல்லாவரம் நகராட்சியில், பூங்காக்கள் பராமரிப்பில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.தனியார் நிறுவனம்பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. சென்னையை ஒட்டியுள்ள இந்நகராட்சி, சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நகராட்சியில், 42

குரோம்பேட்டை--பல்லாவரம் நகராட்சியில், பூங்காக்கள் பராமரிப்பில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தனியார் நிறுவனம்பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. சென்னையை ஒட்டியுள்ள இந்நகராட்சி, சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நகராட்சியில், 42 பூங்காக்கள் உள்ளன.இதில் 16 பூங்காக்கள், 'அம்ருத்' திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டன.இடத்தை சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்டுதல், விளையாட்டு உபகரணங்கள், நீரூற்று, அலங்கார மின் விளக்கு, நடைபாதை, பூச்செடி, புல்தரை, பார்வை யாளர்களை கவரும் வகையில் விலங்குகளின் தத்ரூப வடிவமைப்பு, வண்ண வண்ண இயற்கை ஓவியங்கள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டன.மற்ற பூங்காக்களிலும், பொது மற்றும் சி.எம்.டி.ஏ., நிதியின் மூலம், இதே வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. புறநகர் நகராட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், பல்லாவரம் நகராட்சி பூங்காக்கள் விளங்கின. இந்த பூங்காக்களை பொதுமக்களும், சிறுவர்களும் காலை மற்றும் மாலையில் பயன்படுத்தி வந்தனர்.இரவில், விளக்குகளால் ஜொலிக்கும் பூங்காக்களில், குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதை, பலர் வாடிக்கையாக கொண்டிருந்தனர். தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட்டு, பூங்காக்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டன. மதிப்பீடுஇந்நிலையில், ஒராண்டாக, பூங்கா பராமரிப்பில் நகராட்சி நிர்வாகம் பல்வேறு 'கோல்மால்'களை செய்து வந்ததாகவும், முறையாக பராமரிக்காமல், மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.அதனால், புதியதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, 42 பூங்காக்களையும் முறையாக பராமரிக்கவும், பொதுமக்கள் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறியதாவது :பூங்காக்களை முறையாக பராமரிக்காமல், அதற்காக மாதந்தோறும் 'பில்' போடப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து, விசாரணை நடத்தப்படுகிறது. அதேநேரத்தில், பூங்காக்களை, எந்த நிறுவனம் மேம்படுத்தியதோ, அந்த நிறுவனத்தை அழைத்து, பழுதானவைகளை கணக்கெடுத்து, மதிப்பீடு வழங்குமாறு அறிவுறுத்திஉள்ளோம்.அந்நிறுவனம் வழங்கியவுடன், பூங்காக்கள் சீரமைக்கப்படும். அதன்பின், முறையாக ஒப்பந்தம் விட்டு, பூங்காக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சில இடங்களில், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முன்வந்தால், பூங்காக்களை பராமரிக்கும் பணி, முறையாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஓ.எஸ்.ஆர்., இடங்கள்மீட்கப்படுமா?வீட்டு மனை மற்றும் குடியிருப்புகளை விற்பனை செய்யும் போது, மொத்த பரப்பளவில் 10 சதவீதம் இடத்தை, திறந்தவெளி நிலம் என்ற அடிப்படையில், நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தில், பூங்கா, விளையாட்டு திடல் அமைப்பர்.பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில், ஓ.எஸ்.ஆர்., இடத்தில், அவர்களே பூங்கா அமைத்து பராமரித்துக் கொள்வர். பல்லாவரம் நகராட்சியில், பல ஓ.எஸ்.ஆர்., இடங்கள், அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளது.நகரமைப்பு பிரிவின் இதை கண்டுக்கொள்வதில்லை. அதனால், ஆக்கிரமிப்பு பிடியில் இருக்கும், ஓ. எஸ்.ஆர்., இடங்களை மீட்டு, அங்கு பூங்காக்கள் அமைக்க, நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்புபல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, 13வது வார்டு, ஜெயலட்சுமி நகரில், 2018ல் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில், சில மாதங்கள் மட்டுமே, முறையாக பராமரித்தனர்.அதன்பின், அப்படியே விட்டு விட்டனர். இதனால், மின் கம்பங்கள் உடைந்து, கீழே விழுந்த நிலையில் விளக்கு எரிகிறது; நீரூற்று வேலை செய்வதே இல்லை. தண்ணீர் தொட்டி, பழுதாகி பல மாதங்களாக அப்படியே கிடக்கிறது. அதை சுத்தம் செய்யவும், மூடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.மற்றொரு புறம், பாம்பு, விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.இது குறித்து, நகராட்சியில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பாம்புகளால், முதியவர், சிறுவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X