பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சியில் ஊராட்சிகள் இணையுமா? நீடிக்கிறது குழப்பம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தாம்பரம்-தாம்பரத்தை தலைமையாக வைத்து, மாநகராட்சி உருவாக்கப்படும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், அதில் புறநகர் ஊராட்சிகள் இணையுமா, இணையாதா என, மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு

தாம்பரம்-தாம்பரத்தை தலைமையாக வைத்து, மாநகராட்சி உருவாக்கப்படும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், அதில் புறநகர் ஊராட்சிகள் இணையுமா, இணையாதா என, மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.இந்த அறிவிப்பு, பொது மக்களில் சில தரப்பினருக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.'ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்திய பின், புறநகர் ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்பதா அல்லது தேர்தலுக்கு முன், ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாகவே தேர்தலை நடத்துவதா' என, உயர் அதிகாரிகள் ஆலோசனை, நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மாநகராட்சி அறிவிப்பு ஒருபுறமிருக்க, பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 15 ஊராட்சிகளிலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள், 'ஜரூராக' நடந்து வருகின்றன.

இதுவரை, ஓட்டுச் சாவடிகள், வாக்காளர் பட்டியல், ஓட்டுச் சாவடிகளுக்கான எண்கள் தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ளன. அடுத்தகட்டமாக, 27 மண்டலங்களுக்கும், மண்டல அலுவலர் மற்றும் உதவியாளர், நியமிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.மொத்தம், 15 ஊராட்சிகளிலும், 2.88 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, 358 ஓட்டுச் சாவடிகள் அமைய உள்ளதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கூறினர்.இந்த ஒன்றியத்தின் கீழ், 150 வார்டு உறுப்பினர்கள், 11 ஒன்றிய கவுன்சிலர்கள், 15 ஊராட்சி தலைவர்கள், மூன்று மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X