பொது செய்தி

தமிழ்நாடு

வீடு கிடைச்சிருச்சு: காசு இல்லை வியாசர்பாடி மக்கள் புலம்பல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வியாசர்பாடி-வியாசர்பாடியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, ௫.௫ லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என குடிசை மாற்று வாரியம் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இத்தொகையை கட்டமுடியாமல், விண்ணப்பித்துள்ள மக்கள் கவலை அடைந்துள்ளனர். தி.மு.க., சார்பில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பிரசாரத்தின் போது, வியாசர்பாடி, சாலைமா நகர், புது நகர் 'ஏ' பகுதியை

வியாசர்பாடி-வியாசர்பாடியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, ௫.௫ லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என குடிசை மாற்று வாரியம் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இத்தொகையை கட்டமுடியாமல், விண்ணப்பித்துள்ள மக்கள் கவலை அடைந்துள்ளனர். தி.மு.க., சார்பில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பிரசாரத்தின் போது, வியாசர்பாடி, சாலைமா நகர், புது நகர் 'ஏ' பகுதியை சேர்ந்த 25 பேர், குடியிருக்க வீடு கேட்டு மனு அளித்தனர்.இந்த திட்டம் பின்பு, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டமாக மாற்றப்பட்டது. இம்மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விண்ணப்பித்த 25 பேருக்கும், வியாசர்பாடி, டி.டி.பிளாக் மற்றும் எழும்பூர், கேசவ பிள்ளை பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.மேலும், வீட்டிற்கு தலா 5.௬௮ லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குடிசை மாற்று வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத்தொகையை கட்டமுடியாமல் விண்ணப்பித்துள்ள மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:வியாசர்பாடியில், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மட்டுமே வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அனைவருமே தினக்கூலி வேலை செய்து வருகின்றனர்.குடிசை மாற்று வாரியம் நிர்ணயித்துள்ள, ௫.௬௮ லட்சம் ரூபாயை கட்டும் நிலையில் இல்லை. கொரோனா பெரும் தொற்றால் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம்.குடிசை மாற்று வாரியத்தால் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக 1.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது போல, எங்களுக்கும் பங்களிப்பு தொகையை குறைத்து நிர்ணயிக்க கோரி, குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனருக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X