பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ மாணவர்களிடம் ரூ.50 லட்சம் அபராதம் வசூலிக்க உத்தரவு

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: 'அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற விதியை மீறிய மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ய வேண்டும்' என மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஆண்டும் 300க்கும்
MBBS, doctors, Medical Students

சென்னை: 'அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற விதியை மீறிய மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ய வேண்டும்' என மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஆண்டும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதில் பயிலும் மாணவர்கள் படிப்பு முடிந்த பின் இரண்டாண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதி.


latest tamil news



அதில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 30ம் தேதி நடந்தது. அப்போது மூன்றாண்டு படித்து முடித்த பின் மருத்துவமனைகளில் காலி இடங்கள் இருந்தும் பலர் பணியில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை.

எனவே பணியில் சேர விருப்பமில்லை என எழுதிக் கொடுத்த மாணவர்களை கண்டறிந்து அவர்களிடம் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க அனைத்து மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-ஆக-202119:20:21 IST Report Abuse
மலரின் மகள் அரசு மருத்துவ கல்லூரிகளில்படிப்போருக்கு கட்டணமாக ஐம்பது லட்ச ரூபாய் நிர்ணயித்து அதை அவர்கள் அரசு மருத்துவ மனைகளில் இரண்டாண்டுகள் சேவை செய்தால் கட்டவேண்டாம் என்றும் அவ்வாறு சேவை செய்ய விருப்பமில்லாதவர்கள் கட்டணத்தை கட்டவேண்டும் கல்லூரி படிப்பு முடித்த உடனேயே என்று விதிகள் உருவாக்கலாம். அல்லது முதலிலேயே அதற்கான கூடுதல் கட்டணத்தை கட்டி படிக்கட்டுமே.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஆக-202118:42:41 IST Report Abuse
Natarajan Ramanathan கோட்டால சீட் வாங்கியவனுக்கு அரசு மருத்துவமனை ஒன்றே புகலிடம். வேறு எங்கும் வேலையே கிடைக்காதேப்பா....
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
27-ஆக-202118:07:54 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அபராதம் விதிப்பது தவறு. அவர்கள் படித்த படிப்பை ரத்து செய்து சர்டிபிகேட்டைப் பிடுங்கிக் கொண்ட் அனுப்ப வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X