சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலவை லாரி கவிழ்ந்து விபத்து

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பூந்தமல்லி--பூந்தமல்லி அருகே, ஜல்லி கலவை கொட்டிய லாரி, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பூந்தமல்லி- டிரங்க் சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழை நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி, அரசு பள்ளி அருகே, கால்வாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஜல்லி கலவை லாரி ஒன்று, ஓரமாக

பூந்தமல்லி--பூந்தமல்லி அருகே, ஜல்லி கலவை கொட்டிய லாரி, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பூந்தமல்லி- டிரங்க் சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழை நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி, அரசு பள்ளி அருகே, கால்வாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஜல்லி கலவை லாரி ஒன்று, ஓரமாக நின்று, கலவையை கொட்டியது. அந்த சமயத்தில், திடீரென மண்சரிவு ஏற்பட்டு, லாரி கால்வாயில் கவிழ்ந்தது.இதை பார்த்து, ஊழியர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி, கலவை கொட்டியதே, லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு கராணம் என கூறப்படுகிறது.இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X