பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் நிர்வாக அலுவலர் திடீர் ஆய்வு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோயம்பேடு-நம் நாளிதழ் செய்தியை அடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் முதன்மை நிர்வாக அலுவலர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்திய வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.சென்னையில் நேற்று முன்தினம் பெய்த சிறிய மழைக்கே, கோயம்பேடு மார்க்கெட்டில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால் வியாபாரிகள், தேங்கிய நீரில்

கோயம்பேடு-நம் நாளிதழ் செய்தியை அடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் முதன்மை நிர்வாக அலுவலர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்திய வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.சென்னையில் நேற்று முன்தினம் பெய்த சிறிய மழைக்கே, கோயம்பேடு மார்க்கெட்டில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால் வியாபாரிகள், தேங்கிய நீரில் வியாபாரம் செய்யும் அவல நிலை ஏற்பட்டது.இது தொடர்பாக, நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தி, துறை அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின் மார்க்கெட் நிர்வாக அலுவலர் சாந்தி கூறியதாவது:மார்க்கெட்டில் மழை நீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்ததில், பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டது தெரிந்தது; அவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல், 30க்கும் மேற்பட்ட கடைகளில், விதிமீறி பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த கடைகளின் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து எச்சரித்துள்ளேன்.அதேபோல், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. மழை நீர் தேங்கும் இடங்களை முழுமையாக கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X