தமிழ்நாடு

விளம்பரப் பலகைகள் அகற்றுவதில் 'வேகம்' போதாது! ஒரு நாளுடன் 'கடமை' முடிந்ததா? ஒருங்கிணைப்பு இன்றி அரசுத்துறைகள்

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் இன்னும் ஏராள மான விளம்பரப் பலகைகள் அகற்றப்படாமல் உள்ளன. அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால், விளம்பரப்பலகை அகற்றுவதில், சுணக்கம் நிலவுகிறது.திருப்பூரின் முக்கிய ரோடுகளில் ஏராளமான ராட்சத விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் அமைக்கப்பட்டுள்ள இந்த பலகைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி,
விளம்பரப் பலகைகள் அகற்றுவதில் 'வேகம்' போதாது! ஒரு நாளுடன் 'கடமை' முடிந்ததா? ஒருங்கிணைப்பு இன்றி அரசுத்துறைகள்

திருப்பூர்:திருப்பூரில் இன்னும் ஏராள மான விளம்பரப் பலகைகள் அகற்றப்படாமல் உள்ளன. அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால், விளம்பரப்பலகை அகற்றுவதில், சுணக்கம் நிலவுகிறது.திருப்பூரின் முக்கிய ரோடுகளில் ஏராளமான ராட்சத விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் அமைக்கப்பட்டுள்ள இந்த பலகைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
நேற்று முன்தினம், மாநகராட்சி பகுதியில், 250 பேனர்கள் அகற்றப்பட்டன. நேற்று ஊத்துக்குளி ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்த, 5 பலகைகள் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இருப்பினும், இன்னும் நுாற்றுக்கணக்கான பலகைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன.உள்ளாட்சிகளுக்கு அறிவுரைதிருப்பூர் மாவட்ட நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகள் முன், மாநகராட்சி பகுதியில் 17 நிறுவனங்களின் 153 விளம்பர பலகைகளுக்கும், நகராட்சி பகுதிகளில் மொத்தம் 40 பலகைகளும் அமைக்க அனுமதி அளித்துள்ளது.

தற்போது இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு அனுமதி காலம் நிறைவடைந்துள்ளது. உரிய அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் அமைக்கப்பட்டுள்ள பலகைகளை அகற்ற உரிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.28 க்குள் அகற்றப்படுமா?''மாநகராட்சி தரப்பில், பலகைகள் அமைத்துள்ள அனைத்து கட்டடங்களிலும் ஆய்வு செய்து, உரிய அனுமதி பெறாத மற்றும் விதிமுறைகளை மீறிய பலகைகள் அகற்றப்படுகிறது. வரும் 28ம் தேதிக்குள் முற்றிலும் அகற்றப்படும்'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருங்கிணைப்பு இல்லைவிளம்பர பலகைகள் அகற்றுவதில், அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகம், தடையின்மை சான்று அளித்த நெடுஞ்சாலை துறை மற்றும் விளம்பர பலகை அமைப்பதற்கான கட்டணம் வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்பு ஆகியவற்றுக்கும் பங்கு உள்ளது.ஆனால், அனுமதியில்லாத மற்றும் விதிமீறல் பலகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க இந்த துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால், இவற்றை அகற்றுவதில் சுணக்கமான நிலை காணப்படுகிறது. பெயரளவுக்கு ஒருநாள் மட்டும் 'கடமை'யை செய்து முடித்ததாக, அதிகாரிகள், காட்டிக்கொள்கின்றனர். அனைத்து துறையினரும் அடங்கிய குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X