தமிழ்நாடு

வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால பாதையில் பணிகள் துரிதம்

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வேளச்சேரி - பரங்கிமலை இடையே மேம்பால ரயில் பாதையில், வரும் ஜூலையில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என, அதிகாரி கூறினார்.வேளச்சேரி - பரங்கிமலை இடையே, 495 கோடி ரூபாய் செலவில், 4.5 கி.மீ., மேம்பால ரயில் பாதை அமைக்கும் பணியில், ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் வரை பாதை பணி, இரண்டு நிலையங்கள் கட்டுமான பணிகள் முடிந்து, நிலையங்களில் கருவிகள் நிறுவும்
 வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால பாதையில் பணிகள் துரிதம்

வேளச்சேரி - பரங்கிமலை இடையே மேம்பால ரயில் பாதையில், வரும் ஜூலையில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என, அதிகாரி கூறினார்.

வேளச்சேரி - பரங்கிமலை இடையே, 495 கோடி ரூபாய் செலவில், 4.5 கி.மீ., மேம்பால ரயில் பாதை அமைக்கும் பணியில், ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் வரை பாதை பணி, இரண்டு நிலையங்கள் கட்டுமான பணிகள் முடிந்து, நிலையங்களில் கருவிகள் நிறுவும் பணிகளும் நடந்து வருகின்றன.இப்பாதையில், தில்லைகங்காநகர் - பரங்கிமலை இடையே, 500 மீட்டர் ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பாதை அமைக்க மேலும் தாமதம் ஏற்பட்டது.

இப்பாதையில் முதல் கட்டமாக, வேளச்சேரியில் இருந்து, ஆதம்பாக்கம் வரை ரயில் போக்குவரத்தை நீட்டிக்க, 2020ல் ஜனவரியில், அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.இதனையொட்டி, இப்பாதையில் உள்ள, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களின் மீதம் உள்ள பணிகளை விரைவாக முடித்து, இவ்வாண்டு மார்ச் மாதம், வேளச்சேரியில் இருந்து, ஆதம்பாக்கம் வரை ரயில் போக்குவரத்து நீட்டிக்கவும் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல், கொரோனா பாதிப்பு போன்றவற்றால் பணியில் தாமதம் ஏற்பட்டது.இது குறித்து, ரயில்வே திட்ட அதிகாரிகள் கூறியதாவது.கொரோனா தாக்கத்தால், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களின் கட்டுமான பணி முடிந்து, நடை மேடைகளில், கற்கள் பதிக்கும் பணி, மின் துாக்கி, நகரும் மின் ஏணி நிறுவும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தான் பணிகள் மீண்டும் துவங்கி, நடந்து வருகின்றன. பணிகள் முடிவடைய மூன்று மாதங்கள் ஆகும்.இப்பணிகள் முடிந்தாலும், வேளச்சேரியில் இருந்து, ஆதம்பாக்கம் வரை ரயில் இயக்கப்படாது. இப்பாதையில், தில்லைகங்கா நகர் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதைக்கான இடம் கையகப்படுத்தும் பணி முடிந்து, கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பாதை பணி வரும், 2022ம் ஆண்டு ஜூனில் முடியும். ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், இப்பாதையில், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்துவார். அதன்பின், பாதுகாப்பு கமிஷனர், பயணியர் ரயில் இயக்க சான்றழித்ததும், ஜூலை, முதல் வாரத்தில், வேளச்சேரி - பரங்கிமலை இடையே, மேம்பால ரயில் போக்குவரத்து நீட்டிக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
28-ஆக-202106:44:58 IST Report Abuse
Baskar இதனால் மக்கள் பயன் அடைபவர்கள் அதிகம் , அதனால் தான் வேலை மெதுவாக நடக்கின்றது . சீக்கிரமாக தொடங்க வேண்டுகிறோம்.
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
27-ஆக-202112:49:48 IST Report Abuse
sridhar பணிகள் முடிவடைய மூன்று மாதங்கள் ஆகும்.இப்பணிகள் முடிந்தாலும், வேளச்சேரியில் இருந்து, ஆதம்பாக்கம் வரை ரயில் இயக்கப்படாது. ஏற்கனவே இந்த ஆட்டோகாரகள் அட்டகாசம் தாங்க முடியல எதற்காக தாமதம் முடிந்தால் ஆரம்பிக்க வேண்டியதுதானே மக்கள் மற்றும் கூட நெரிசல் குறையும் கொஞ்சம் யோசித்தால் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
27-ஆக-202112:49:47 IST Report Abuse
sridhar பணிகள் முடிவடைய மூன்று மாதங்கள் ஆகும்.இப்பணிகள் முடிந்தாலும், வேளச்சேரியில் இருந்து, ஆதம்பாக்கம் வரை ரயில் இயக்கப்படாது. ஏற்கனவே இந்த ஆட்டோகாரகள் அட்டகாசம் தாங்க முடியல எதற்காக தாமதம் முடிந்தால் ஆரம்பிக்க வேண்டியதுதானே மக்கள் மற்றும் கூட நெரிசல் குறையும் கொஞ்சம் யோசித்தால் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X