பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி பராமரிப்பு பணி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை- - ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான பள்ளியில் 86 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் பராமரிப்பு பணிகளை, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 141 கிரவுண்டு நிலம், சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. அதில், பள்ளிக் கட்டடங்களுடன் கூடிய 32

சென்னை- - ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான பள்ளியில் 86 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் பராமரிப்பு பணிகளை, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 141 கிரவுண்டு நிலம், சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. அதில், பள்ளிக் கட்டடங்களுடன் கூடிய 32 கிரவுண்டு நிலம், தனியாரிடம் இருந்து, கோவில் நிர்வாகத்திற்கு சுவாதீனம் பெறப்பட்டது. கோவில் சார்பில் நடத்தப்படும் அப்பள்ளியில், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது.மேலும், பள்ளி மாணவ - மாணவியருக்கான விளையாட்டு மைதானம் அமைத்து, அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுக்கப்படும். பள்ளி வளாகத்தை சுற்றி, மதில்சுவர் அமைத்து, அதில் ஆன்மிகம் சம்பந்தமான புகைப்படங்கள், புராதான சின்னங்கள் வரையப்படும்.பள்ளியின் முகப்பில், கோவில் தோற்றம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு கூறினார்.இந்த ஆய்வின்போது, ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணைக் கமிஷனர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X