ஆப்கன் - பாகிஸ்தான் வர்த்தகம் 50 சதவீதம் அதிகரிப்பு

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தால், இந்தியா - அந்நாட்டு இடையேயான வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதேசமயம், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம், கடந்த வாரத்தில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.போக்குவரத்தில் பிரச்னைகள் இருந்த போதிலும், வர்த்தகம் அதிகரித்துள்ளதாக, பாகிஸ்தானின் வர்த்தகம் மற்றும்
Afghanistan, Pakistan, Taliban

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தால், இந்தியா - அந்நாட்டு இடையேயான வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதேசமயம், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம், கடந்த வாரத்தில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

போக்குவரத்தில் பிரச்னைகள் இருந்த போதிலும், வர்த்தகம் அதிகரித்துள்ளதாக, பாகிஸ்தானின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வங்கிகள் மூடப்பட்டிருந்த போதிலும், பாகிஸ்தானுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.


latest tamil news



இதற்கிடையே, பாகிஸ்தானின் வர்த்தகம், தொழில், மற்றும் முதலீட்டு துறையினர், கடந்த 23ம் தேதியன்று தலிபான்களை சந்தித்து, தனியார் நிறுவன பாதிப்புகள் குறித்து பேச்சு நடத்தி உள்ளனர். தலிபான் தரப்பும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானை போலவே ஈரானும், ஆப்கானிஸ்தானுடனான எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி, தலிபான் கைப்பற்றலுக்கு பின் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானிலிருந்து உலோகங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் உலோக தேவை இருந்த போதிலும், குறைவான விலையே வழங்குவதால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஆக-202114:52:20 IST Report Abuse
A.George Alphonse பாம்பு பாம்போடுதான் சேரும். அதனால் தான் இந்த நிலை.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
27-ஆக-202114:47:19 IST Report Abuse
elakkumanan பண்டமாற்று முறையில் யாவாரம் பண்ணுவானுவோ. ஒரு பக்கம் சாவு கொடுத்து இன்னொரு பக்கம், குண்டு மற்றும் துப்பாக்கி கொடுத்து... நல்லா நடக்கட்டும்..ஒங்க யாவாரத்தை நீங்களே பண்ணுங்கப்பா..சீனா ரெண்டு பேருக்கும் டோக்கன் போட்டு காசு வசூல் பண்ணுவானுவோ.. வரிசையா , ஒழுக்கமா போயி சாவணும் ல.. கணக்கு வழக்கு வேணும் ல...சாவுன்னாலும் ஒரு கணக்கு வேணும்லப்ப்பா.. கணக்கு சீனா எப்பயுமே நல்லா போடுவானுவோ..
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
27-ஆக-202112:19:02 IST Report Abuse
mei எல்லா முஸ்லீம் நாடுகளும் மிக தெளிவாகவே இருக்கின்றன. செக்குலரிஸ்ம் என்ற பெயரில் சிறுபான்மையினரை தூக்கிப்பிடித்து இந்தியா மட்டுமே பெரும்பான்மை இந்துக்களை மோசமாக நடத்துகிறது
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-ஆக-202113:27:24 IST Report Abuse
Ramesh Sargamமுற்றிலும் உண்மை....
Rate this:
27-ஆக-202115:36:48 IST Report Abuse
ராஜாஉண்மை. இசுலாமிய மற்றும் கிருத்துவ நாடுகள் சுயநலமாக, ஒற்றுமையாக இருந்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால், இந்தியா மட்டும் செக்குலரிசம் என்னும் போர்வையில் எல்லோருக்கும் சலுகைகள் கொடுத்துகொண்டே இருக்க வேண்டும்....
Rate this:
Suman - madurai,இந்தியா
27-ஆக-202116:44:08 IST Report Abuse
Sumanஎப்பிடி பட்டாலும் மரமண்ட ஹிந்துவுக்கு அறிவு வரமாட்டேன்குதே.?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X