ஆப்கன் - பாகிஸ்தான் வர்த்தகம் 50 சதவீதம் அதிகரிப்பு| Dinamalar

ஆப்கன் - பாகிஸ்தான் வர்த்தகம் 50 சதவீதம் அதிகரிப்பு

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (10) | |
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தால், இந்தியா - அந்நாட்டு இடையேயான வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதேசமயம், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம், கடந்த வாரத்தில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.போக்குவரத்தில் பிரச்னைகள் இருந்த போதிலும், வர்த்தகம் அதிகரித்துள்ளதாக, பாகிஸ்தானின் வர்த்தகம் மற்றும்
Afghanistan, Pakistan, Taliban

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தால், இந்தியா - அந்நாட்டு இடையேயான வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதேசமயம், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம், கடந்த வாரத்தில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

போக்குவரத்தில் பிரச்னைகள் இருந்த போதிலும், வர்த்தகம் அதிகரித்துள்ளதாக, பாகிஸ்தானின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வங்கிகள் மூடப்பட்டிருந்த போதிலும், பாகிஸ்தானுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.


latest tamil news



இதற்கிடையே, பாகிஸ்தானின் வர்த்தகம், தொழில், மற்றும் முதலீட்டு துறையினர், கடந்த 23ம் தேதியன்று தலிபான்களை சந்தித்து, தனியார் நிறுவன பாதிப்புகள் குறித்து பேச்சு நடத்தி உள்ளனர். தலிபான் தரப்பும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானை போலவே ஈரானும், ஆப்கானிஸ்தானுடனான எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி, தலிபான் கைப்பற்றலுக்கு பின் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானிலிருந்து உலோகங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் உலோக தேவை இருந்த போதிலும், குறைவான விலையே வழங்குவதால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X