சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் இருந்து தவறி விழுந்த காவலர் பலி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை-சென்னையில், சிறப்பு போலீஸ் படையில், இரண்டாம் அணியில், 'பி' கம்பெனியில் கான்ஸ்டபிளாக மோகன், 41, பணிபுரிந்து வந்தார். கீழ்ப்பாக்கம் நிலைய பணிக்காக, தாம்பரத்தில் இருந்து, நேற்று காலை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார்.ரயில் சேத்துப்பட்டு - எழும்பூர் நிலையங்கள் இடையே சென்றபோது, ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். பதறிய பயணியர், எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு

சென்னை-சென்னையில், சிறப்பு போலீஸ் படையில், இரண்டாம் அணியில், 'பி' கம்பெனியில் கான்ஸ்டபிளாக மோகன், 41, பணிபுரிந்து வந்தார். கீழ்ப்பாக்கம் நிலைய பணிக்காக, தாம்பரத்தில் இருந்து, நேற்று காலை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார்.ரயில் சேத்துப்பட்டு - எழும்பூர் நிலையங்கள் இடையே சென்றபோது, ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். பதறிய பயணியர், எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள், ரயில் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது.எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. உடல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கல்லுாரி முதல்வர்ஈரோடு மாவட்டம், நசியனுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் முதல்வராக பணிபுரிபவர் உதயகுமார், 59. மனைவியுடன் டில்லி சென்றுவிட்டு, இம்மாதம், 21ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார்.பின், சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்வதற்காக, கோரக்பூர் - கொச்சுவேளி ரயிலில் மனைவியை ஏறச்சொல்லி விட்டு, ஆறாவது நடைமேடையில் உதயகுமார் நின்றிருந்தார். திடீரென ரயில் புறப்பட, ஓடி வந்து ஏற முயன்றபோது, கால் இடறி நடைமேடையில் விழுந்தார்.இதில் பலத்த காயமடைந்தவரை, சென்ட்ரல் ரயில்வே போலீசார் மீட்டு, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X