தமிழ்நாடு

போக்குவரத்து சிக்னல் இயக்க புதிய திட்டம்! 'ரிமோட் கன்ட்ரோல்' அறிமுகம்!

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவையில் சோதனை முயற்சியாக, போக்கு வரத்து போலீசார் 'ரிமோட்' மூலம் சிக்னலை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை ரோடு உள்பட பல்வேறு இடங்களில், 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.இந்த சிக்னல்களை, போக்குவரத்து போலீசார் அமர்ந்து இயக்க, வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்து
 போக்குவரத்து சிக்னல் இயக்க புதிய திட்டம்! 'ரிமோட் கன்ட்ரோல்' அறிமுகம்!

கோவை:கோவையில் சோதனை முயற்சியாக, போக்கு வரத்து போலீசார் 'ரிமோட்' மூலம் சிக்னலை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை ரோடு உள்பட பல்வேறு இடங்களில், 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.இந்த சிக்னல்களை, போக்குவரத்து போலீசார் அமர்ந்து இயக்க, வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, போலீசாரே சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.இதனால், அதிக வாகனங்கள் தேங்கி நிற்கும் ரோட்டில், தேவையான நேரம் அவகாசம் கொடுத்து போக்குவரத்து சரிசெய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சிக்னல்கள், போலீசார் பணியில் இல்லாதபோது, தானியங்கி முறையில் 'டைமர்' வைத்து இயங்கி வருகின்றன.போக்குவரத்து போலீசார், ஒரே இடத்தில் அமர்ந்து சிக்னல்களை இயக்குவதால், சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிவேகமாக சிக்னலை கடப்பது போன்ற விதிமீறல்கள் நடக்கின்றன.இதனை, போலீசார் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து, கீழே இறங்கி வந்து தடுக்க முடியாததால், விதிமீறல் வாகன ஓட்டிகள் தப்பி விடுகின்றனர்.

இதையடுத்து, தற்போது சிக்னல்களை போலீசார் ரோட்டில் நடந்து கொண்டே, 'ரிமோட்' மூலம் இயக்கும் வகையிலான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:முதற் கட்டமாக சோதனை முறையில், டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறைப்பட்டுள்ளது.

இங்குள்ள போக்குவரத்து போலீஸ்காரர், கையில் 'ரிமோட்' வைத்துக் கொண்டு, சிக்னலை இயக்குவார்.இவர் கூண்டில் அமராமல், ரோட்டில் நடந்து கண்காணித்துக் கொண்டே சிக்னலை இயக்கலாம். போக்குவரத்து போலீஸ்காரர் ரோட்டில் நிற்பதால், சிக்னல் விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும். இதை மீறி செல்லும், வாகன ஓட்டிகள் எளிதாக பிடிபடுவார்கள்.சென்சார் மூலம் சிக்னலில் இருந்து, 100 மீட்டர் துாரம் வரை ரிமோட்டை இயக்க முடியும். அடுத்த கட்டமாக லாலி ரோடு சந்திப்பிலுள்ள சிக்னலில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன்பின், படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'ரிமோட்' இயங்குவது எப்படி?ரிமோட்டில் ஒன்று முதல் எட்டு வரை, வரிசை எண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு வழித்தடமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எந்த எண்ணை போலீசார் இயக்குகிறாரோ, அந்த எண்ணுக்கான சிக்னலில் பச்சை விளக்கு எரியும். தானியங்கி முறையில் சிக்னல் இயங்குவதற்கும் பிரத்யேக எண் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
30-ஆக-202112:30:50 IST Report Abuse
JeevaKiran வரவேற்கப்படுகிறது. முக்கியமாக ஆம்புலன்ஸ் வரும்போது உடனடியாக சிக்னலை மாற்றலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X