பொது செய்தி

தமிழ்நாடு

ஏர்போர்ட்டில் 'தங்க வேட்டை' ரகசியம் அம்பலம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பல்லாவரம்--சென்னையில், 9 கிலோ கடத்தல் தங்கத்தை 'ஆட்டை' போட வழிப்பறி நாடகமாடிய புகார்தாரர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.விமான நிலையத்தில், துாய்மை பணியாளர் அடங்கிய 'நெட்வொர்க்' வாயிலாக, தங்க கடத்தல் கும்பல் நுாதனமாக செயல்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.'நெட்வொர்க்'பம்மல்,

பல்லாவரம்--சென்னையில், 9 கிலோ கடத்தல் தங்கத்தை 'ஆட்டை' போட வழிப்பறி நாடகமாடிய புகார்தாரர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.விமான நிலையத்தில், துாய்மை பணியாளர் அடங்கிய 'நெட்வொர்க்' வாயிலாக, தங்க கடத்தல் கும்பல் நுாதனமாக செயல்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.'நெட்வொர்க்'பம்மல், வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் சரவணன், 30. இவர், விமான பயணியருக்கு உணவு தயார் செய்து அனுப்பும், 'ஓப்ராய் பிளைட் கிச்சன் சர்வீஸ்' என்ற பெயரில் குரோம்பேட்டையில் உள்ள ஓட்டலில், மேற்பார்வையாளராக பணி புரிகிறார்.கடந்த 23ம் தேதி, பல்லாவரம் காவல் நிலையத்தில், சரவணன் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'கடந்த 22ம் தேதி இரவு பணி முடிந்து, மறுநாள் காலை சென்னை விமான நிலையத்தில், ஒருவர் கொடுத்த எட்டு பார்சல்களில் இருந்த, 9 கிலோ தங்க கட்டிகளை எடுத்து, இம்ரான் என்பவரை சந்திப்பதற்காக டூ - வீலரில் சென்றேன். 'பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில், 'ஆயுத் பவன்' எதிரே சென்றபோது, மர்ம நபர்கள் இருவர் வழிமறித்து தாக்கி, 9 கிலோ தங்க கட்டிகள், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர்' என தெரிவித்திருந்தார்.புகார் குறித்து சந்தேகமடைந்த போலீசார், சரவணனை தீவிரமாக விசாரித்தனர். தொடர்ந்து, பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையிலான போலீசார், அவருடன் தொடர்புடைய ஐந்து பேரை பிடித்து நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஒரு கும்பல், 'நெட்வொர்க்' அமைத்து, ரகசியமாக தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும், அப்படி கடத்தி வரப்பட்ட, 9 கிலோ தங்க கட்டிகளை, சரவணன் உள்ளிட்ட சிலர் 'ஆட்டை' போட திட்டமிட்டு, நாடகமாடியதும் தெரியவந்தது.இதையடுத்து, விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த, ஆலந்துாரில் உள்ள சரவணனின் நண்பர் முகமது நசீர், 25, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 9 கிலோ தங்க கட்டிகள் மற்றும் ஒரு மொபைல் போனை, போலீசார் பறிமுதல் செய்தனர்.கழிப்பறை கழிவுகள்இது தொடர்பாக, சரவணன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரபுராம், 34, மற்றும் ஆலந்துாரைச் சேர்ந்த முகமது நசீர், உள்ளிட்ட மூன்று பேரை, நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, கடத்தல் நெட்வொர்க் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இதேபோல பல கும்பல் கடத்தலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவோரை, சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்வதை அடிக்கடி பார்க்கிறோம்.இந்த புகார் குறித்து விசாரணை நடத்தியதில், விமான நிலையத்தில் தற்காலிகமாக பணி செய்யும் ஊழியர்கள் முதல் விமானங்களுக்கு உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் வரை, ஒரு நெட்வொர்க் அமைத்து, ரகசியமாக தங்கம் கடத்தலை அரங்கேற்றியது தெரியவந்தது.வெளி நாடுகளில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வருவோர், விமான இருக்கை அடியில் வைத்து சென்று விடுவர். விமானத்தை சுத்தம் செய்ய செல்லும் தற்காலிக ஊழியர்கள், அந்த தங்க கட்டிகளை எடுத்து, கழிப்பறை கழிவுகளுடன் கலந்து வெளியே எடுத்து வருவர்.ரூ.50 ஆயிரம்தங்கத்தை வெளியே எடுத்து வந்து, விமானங்களுக்கு உணவு வினியோகம் செய்ய வரும் ஊழியர்களிடம் கொடுப்பர். அவர்கள் மூலம், தங்க கடத்தல் கும்பலின் கைக்கு, தங்க கட்டிகள் போய் சேர்ந்துவிடும். ஒரு முறை, தங்க கட்டிகளை கடத்தி கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.இந்த 'நெட்வொர்க்' குறித்து, விசாரணை நடத்தப்படுகிறது. சரவணனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 9 கிலோ தங்க கட்டிகள், இந்த முறையிலேயே கடத்தப்பட்டுள்ளது. அதனால், ரகசிய தங்க கடத்தல் நெட்வொர்க்கும்பல் குறித்து, தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.'நெட்வொர்க்' கும்பல் கைவரிசைபல்வேறு பாதுகாப்பு வசதிகள் சோதனைகள் கொண்ட, சென்னை விமான நிலையத்தில் துாய்மை ஊழியர்கள் உள்ளிட்ட 'நெட்வொர்க்' வாயிலாக எளிதாக தங்கம் கடத்தல் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முறை, ஒன்பது கிலோ தங்கம் என்றால், அந்த கும்பல் இதுவரை, எத்தனை முறை, எத்தனை கிலோ தங்கத்தை கடத்தியிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனால், கைது செய்யப்பட்டோர் மூலம், கடத்தல் 'நெட்வொர்க்' குறித்து விசாரணை நடத்தினால், பல்வேறு உண்மைகள் வெளி வரும். அதே நேரத்தில், இது போன்று பல கும்பல், தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X