சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மளிகை கடைக்குள் புகுந்த கார் மூதாட்டி பலி; 5 பேர் காயம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
நீலாங்கரை,--ஈஞ்சம்பாக்கத்தில், மளிகை கடைக்குள் கார் புகுந்ததில் மூதாட்டி பலியானார்; ஐந்து பேர் காயமடைந்தனர். விபத்துக்கு காரணமான போதை ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் கண்ணம்மா, 70. நேற்று, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது, மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், சாலை தடுப்பில் ஏறி,

நீலாங்கரை,--ஈஞ்சம்பாக்கத்தில், மளிகை கடைக்குள் கார் புகுந்ததில் மூதாட்டி பலியானார்; ஐந்து பேர் காயமடைந்தனர். விபத்துக்கு காரணமான போதை ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் கண்ணம்மா, 70. நேற்று, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது, மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், சாலை தடுப்பில் ஏறி, இடது பக்கத்தில் உள்ள மளிகை கடை முன் நின்றவர்கள் மீது மோதி, கடைக்குள் புகுந்தது.இதில், கண்ணம்மா சம்பவ இடத்திலேயே பலியானார்; கடை ஊழியர் தினேஷ்குமார், 47, அதிவீரபாண்டியன், 70, மற்றும் காரில் இருந்த ஆல்பர்ட், 50, சுதாகர், 38, வெங்கடேசன், 47, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.அவர்கள், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாலை ஓரம் நின்ற ஒரு எருமை மாடும் காயமடைந்தது.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையில், கார் ஓட்டுனர் பெருங்குடியைச் சேர்ந்த ரவிக்குமார், 35, போதையில் கார் ஓட்டியது தெரிந்தது.போலீசார், ரவிக்குமாரை கைது செய்து, சம்பவம் தொடர்பாக விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X