சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ'வில் சிக்கியவர் ஆந்திராவில் பிடிபட்டார்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கொடுங்கையூர்,--போக்சோ வழக்கில் சிக்கி, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, வழக்கறிஞர் பிரிவு, பெரம்பூர் மேற்கு மண்டல முன்னாள் பா.ஜ., தலைவர் பார்த்தசாரதி மீது கொடுங்கையூர் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், ஜூலை

கொடுங்கையூர்,--போக்சோ வழக்கில் சிக்கி, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, வழக்கறிஞர் பிரிவு, பெரம்பூர் மேற்கு மண்டல முன்னாள் பா.ஜ., தலைவர் பார்த்தசாரதி மீது கொடுங்கையூர் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், ஜூலை 16ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து பார்த்தசாரதியை தேடி வந்தனர். பாலியல் சர்ச்சையில் சிக்கியதையடுத்து, பா.ஜ.,வில் இருந்து பார்த்தசாரதி நீக்கப்பட்டார்.இந்நிலையில், ஆந்திர மாநிலம்,சித்துாரில் பதுங்கியிருந்த பார்த்தசாரதியை, கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர். எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X