பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழைய பதிவுகள் அழிப்பு: சூடு பிடிக்கிறது உள்ளாட்சித் தேர்தல் பணி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:உள்ளாட்சி தேர்தலுக்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள பழைய பதிவுகளை அழிக்கும் பணி நடந்து வருகிறது.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் இருக்கின்றன. புதிதாக, 6 மாநகராட்சிகள் உருவாக்கம் தொடர்பாக, சட்டசபையில் அறிவித்ததை போல், மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பது தொடர்பாகவும், வார்டுக்கு, 10 ஆயிரம் வாக்காளர்கள் என நிர்ணயித்து, 140
 ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழைய பதிவுகள் அழிப்பு: சூடு பிடிக்கிறது உள்ளாட்சித் தேர்தல் பணி

கோவை:உள்ளாட்சி தேர்தலுக்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள பழைய பதிவுகளை அழிக்கும் பணி நடந்து வருகிறது.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் இருக்கின்றன. புதிதாக, 6 மாநகராட்சிகள் உருவாக்கம் தொடர்பாக, சட்டசபையில் அறிவித்ததை போல், மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பது தொடர்பாகவும், வார்டுக்கு, 10 ஆயிரம் வாக்காளர்கள் என நிர்ணயித்து, 140 அல்லது, 150 வார்டுகளாக விரிவாக்கம் செய்யலாமா எனவும், தி.மு.க.,வினர் ஆலோசனை செய்திருக்கின்றனர்.ஆனால், கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட, வார்டு மறுவரையறையை அடிப்படையாகக் கொண்டு, 100 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.சில வார்டுகள், இரு தொகுதிகளுக்குள் வருகின்றன. இரு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, ஒதுக்க வேண்டியுள்ளது.அதனால், ஒரே தொகுதிக்குள் வார்டுகளை வரையறை செய்யும் வகையில், மாற்றியமைக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.இச்சூழலில், மாநகராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், பயன்படுத்துவதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், உப்பிலிபாளையம் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.அவற்றில் உள்ள பழைய பதிவுகளை அழிக்கும் பணி, சில நாட்களாக துரிதகதியில் நடந்து வருகிறது. பதிவுகளை அழித்ததும், ஒவ்வொரு இயந்திரத்துக்கும் எண்கள் இடப்பட்டு, வரிசையிடப்படுகின்றன.தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு பணியாக செய்து வருகிறோம். வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது; 1,000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற கணக்கில், புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது, இயந்திரங்களை தயார் செய்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X