பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் கழிவு நீர் வெளியேற்றம் திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-சாலையோரம், நீர்நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், கழிவு நீர் எடுத்துச் செல்லும் லாரிகள், சாலையோரங்களிலும், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளிலும், வெளியேற்றக்கூடாது.கழிவு நீர்

திருவள்ளூர்-சாலையோரம், நீர்நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், கழிவு நீர் எடுத்துச் செல்லும் லாரிகள், சாலையோரங்களிலும், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளிலும், வெளியேற்றக்கூடாது.கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்தான், கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். விதியை மீறி, கழிவு நீர் வெளியேற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.மேற்கண்ட விதிமீறல் ஏற்படின், பொதுமக்கள், திருவள்ளூர் மாவட்ட உதவி மையத்தினை, 'டோல் பிரீ' எண். 1800 599 7626 மற்றும் 'வாட்ஸ்ஆப்' 98403 27626 எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X