பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வீடாக கணக்கெடுப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கடம்பத்துார்--கடம்பத்துார் ஒன்றியத்தில், 'மக்களை தேடி மருத்துவ முகாம்' திட்டத்தின்கீழ் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் வரும், டிசம்பர் மாதம் இறுதிக்குள், 'மக்களை தேடி மருத்துவம் முகாமில்' ஒரு கோடி பேர் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோயாளிகள் மருத்துவமனைக்கு

கடம்பத்துார்--கடம்பத்துார் ஒன்றியத்தில், 'மக்களை தேடி மருத்துவ முகாம்' திட்டத்தின்கீழ் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் வரும், டிசம்பர் மாதம் இறுதிக்குள், 'மக்களை தேடி மருத்துவம் முகாமில்' ஒரு கோடி பேர் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற்று பயன்பெறலாம்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி பகுதியில், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர், ஆகியோர் வீடு, வீடாக சென்று, 'மக்களை தேடி மருத்துவ முகாம்' குறித்து எடுத்து கூறி கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X