பொது செய்தி

தமிழ்நாடு

முகாம் விவரம் இனி நாளிதழ்களில் வெளியாகும்: சமூக வலைதள சடுகுடுவுக்கு முடிவு

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை; தடுப்பூசி முகாம் நடத்தப்படுவது பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகும் அறிவிப்புகளால், பொதுமக்கள் குழம்பும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இனி முகாம் நடக்கும் இடங்கள் பற்றிய விவரத்தை நாளிதழ்களில் வெளியிட, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பது பற்றிய அறிவிப்புகள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன. எனினும்,
 முகாம் விவரம் இனி நாளிதழ்களில் வெளியாகும்: சமூக வலைதள சடுகுடுவுக்கு முடிவு

கோவை; தடுப்பூசி முகாம் நடத்தப்படுவது பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகும் அறிவிப்புகளால், பொதுமக்கள் குழம்பும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இனி முகாம் நடக்கும் இடங்கள் பற்றிய விவரத்தை நாளிதழ்களில் வெளியிட, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பது பற்றிய அறிவிப்புகள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன. எனினும், சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள், முதியவர்கள், எப்போது தடுப்பூசி முகாம், எங்கு தடுப்பூசி முகாம் என்கிற விபரம் அறியாமல், தடுமாறும் நிலை ஏற்படுகிறது.

எனவே சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடுவதற்கு பதிலாக, பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டால், கிராமப்பகுதி மக்களும் எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்பதே, பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

இது பற்றி மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில், ''தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள் பற்றிய அறிவிப்பு, தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு சிரமம் என்றும் புகார்கள் வருகின்றன. ''எனவே முகாம் விவரங்களை, முகாம் நடக்கும் நாட்களில் பத்திரிகைகளில் வெளியிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்,'' என்றார்.

இதற்கிடையே நேற்று காலை கலெக்டர் வெளியிட்ட சமூக வலைதள அறிவிப்பில், 'சென்னையில் இருந்து தடுப்பூசிகள் கொண்டு வரப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் பிற்பகலில் முகாம் நடக்கிறது. முகாம் நடக்கும் இடம் பற்றிய விவரம் காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

மாநகராட்சி சார்பில் அதற்கு முன் வெளியிடப்பட்ட, அதிகாரபூர்வ அறிவிப்பில், 'தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடப்பட மாட்டாது' என்று தெரிவிக்கப்பட்டது.கலெக்டர் அறிவிப்பையும், அதற்கு முன் வெளியாகியிருந்த மாநகராட்சி அறிவிப்பையும் பார்த்த பொதுமக்கள், குழம்பும் நிலை ஏற்பட்டது.நாளிதழ்களில் முகாம் பற்றிய விவரங்களை வெளியிட்டால், இத்தகைய குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும் என்பது உறுதி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202119:57:52 IST Report Abuse
Vittal anand rao. சினிமா சுவரொட்டிகள் போன்ற விளம்பரம் செய்யல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X