நிழற்குடை இல்லாமல் மெதுார் பயணியர் தவிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பொன்னேரி--நிழற்குடை இல்லாததால் பஸ் பயணியர் வெயிலில் காத்திருந்து தவிப்பிற்கு ஆளாகின்றனர்.பொன்னேரி- - பழவேற்காடு வழித்தடத்தில் உள்ள மெதுார் கிராமத்தில், அங்குள்ள குளக்கரை அருகே பயணியர் பஸ்சிற்கு காத்திருக்கின்றனர்.இங்கு நிழற்குடை இல்லாததால், பஸ்சிற்கு காத்திருக்கும் பயணியர் வெயிலில் நின்று தவிக்கின்றனர். மழையின்போது கடைகளின் ஓரங்களில் தஞ்சம் அடைகின்றனர்.வங்கி,

பொன்னேரி--நிழற்குடை இல்லாததால் பஸ் பயணியர் வெயிலில் காத்திருந்து தவிப்பிற்கு ஆளாகின்றனர்.பொன்னேரி- - பழவேற்காடு வழித்தடத்தில் உள்ள மெதுார் கிராமத்தில், அங்குள்ள குளக்கரை அருகே பயணியர் பஸ்சிற்கு காத்திருக்கின்றனர்.இங்கு நிழற்குடை இல்லாததால், பஸ்சிற்கு காத்திருக்கும் பயணியர் வெயிலில் நின்று தவிக்கின்றனர். மழையின்போது கடைகளின் ஓரங்களில் தஞ்சம் அடைகின்றனர்.வங்கி, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு பெரிய மாங்கோடு, கோளூர், அண்ணாமலைச்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் மெதுாருக்கு வந்து செல்கின்றனர்இதனால், மெதுார் குளக்கரை பகுதியில் எப்போதும் பயணியர் கூட்டம் இருக்கும்.கிராமங்களுக்கு அடிக்கடி பஸ் சேவை இல்லாத நிலையில், அவர்கள் வெயில் மற்றும் மழையில் பல மணி நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.மேற்கண்ட பகுதியில் பஸ் நிலையம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்து, சாத்திய கூறுகள் இருந்ததால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X