மின் கம்பத்தை மறைக்கும் செடி, கொடிகள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருத்தணி-மின் கம்பம் முழுதும் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் அடிக்கடி மின் துண்டிப்பு நடக்கிறது என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட இருளர் காலனியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்குள்ள ஒன்றிய சாலை வழியாக, வீரட்டீஸ்வரர் மற்றும் கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் மற்றும் அரசு மருத்துவமனைக்கு
 மின் கம்பத்தை மறைக்கும் செடி, கொடிகள்

திருத்தணி-மின் கம்பம் முழுதும் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் அடிக்கடி மின் துண்டிப்பு நடக்கிறது என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட இருளர் காலனியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்குள்ள ஒன்றிய சாலை வழியாக, வீரட்டீஸ்வரர் மற்றும் கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வாகன ஓட்டிகள் அதிகளவில் செல்கின்றனர்.இந்நிலையில், இருளர் காலனி சாலையோரம் ஏற்படுத்தப்பட்ட மின் கம்பத்தை முறையாக மின் வாரிய ஊழியர்கள் பராமரிக்காததால், தற்போது கம்பம் முழுதும் செடி, கொடிகள் படர்ந்துள்ளன.மேலும், மின் கம்பத்தை சுற்றியும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் மின் வயர்கள் பழுது பார்ப்பதற்கு கூட மின் வாரிய ஊழியர்கள் செல்வதற்கு வழியில்லை.மின் கம்பம் மற்றும் வயர்களை செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளதால், அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. எனவே, மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருத்தணி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மின் கம்பம் சுற்றியுள்ள செடி, கொடிகள், ஓரிரு நாளில் அகற்றி சீரான மின்சாரம் வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X