பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டுகையில் பெருமாள் சுவாமி சிலை கண்டெடுப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பொன்னேரி-பொன்னேரி அருகே, வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் பணியின்போது, பெருமாள், ஆண்டாள் மற்றும் அலமேலு சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதிமக்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி, 42; டிராக்டர் மெக்கானிக். இவர் வீடு கட்டுவதற்காக, அதே பகுதியில் உள்ள வீட்டுமனையில், பூமி பூஜை போட்டு,

பொன்னேரி-பொன்னேரி அருகே, வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் பணியின்போது, பெருமாள், ஆண்டாள் மற்றும் அலமேலு சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதிமக்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி, 42; டிராக்டர் மெக்கானிக். இவர் வீடு கட்டுவதற்காக, அதே பகுதியில் உள்ள வீட்டுமனையில், பூமி பூஜை போட்டு, நேற்று அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டார்.கடப்பாரையால், 2 அடி ஆழம் தோண்டும்போது, பாறை மீது மோதுவது சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து, பணியில் இருந்தவர்கள், மெதுவாக பள்ளம் தோண்டியபோது, அடுத்தடுத்து, 3 அடி உயரமுள்ள மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.பின், அவற்றை மேலே கொண்டு வந்து, தண்ணீர் மற்றும் பால் ஊற்றி துாய்மைப்படுத்தியபோது, அவை பெருமாள், ஆண்டாள் அலமேலு சுவாமி சிலைகள் என்பது தெரிய வந்தது.பின், அந்த சிலைகளை தரையில் வைத்து வழிபாடு செய்தனர். காட்டு தீ போன்று, இத் தகவல் பரவியதால், சில மணி நேரத்திலே அப்பகுதியில் கிராம மக்கள் குவிந்தனர். கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகளை வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர்.இதையடுத்து, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.சிலைகள் பச்சை நிறத்தில் இருப்பதால், மரகதத்தில் செய்யப்பட்டதா அல்லது கற்சிலையா என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளதாக, வருவாய்த் துறையினர் தெரிவித்து உள்ளனர்.கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை, தாங்களே கோவில் கட்டி வழிபாடு செய்ய, வருவாய்த் துறையினரிடம் கிராமவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X