பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.110 கோடி கடன்: இந்தியன் வங்கி அதிகாரி தகவல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:இந்தியன் வங்கி சார்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கடன் முகாம், கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது.சென்னை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் பிரிவு கார்ப்பரேட் அலுவலக பொது மேலாளர் சுதாகரராவ் கூறியதாவது:கொரோனாவால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை
 ஒரே நாளில் ரூ.110 கோடி கடன்: இந்தியன் வங்கி அதிகாரி தகவல்

கோவை:இந்தியன் வங்கி சார்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கடன் முகாம், கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது.சென்னை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் பிரிவு கார்ப்பரேட் அலுவலக பொது மேலாளர் சுதாகரராவ் கூறியதாவது:கொரோனாவால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு, இந்தியன் வங்கி நாடு முழுவதும் கடன் முகாம்களை நடத்தி வருகிறது. தொழில் நிறுவனங்களை கைதுாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவே, இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கும்பகோணம், காரைக்குடி ஆகிய எட்டு மண்டலங்களில் முகாம்கள் மூலம், 110 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ரூ.48 கோடி வணிக நிறுவனங்களுக்கான கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், உதவி மண்டல மேலாளர் விஜய்குமார், வர்த்தக பொது மேலாளர் கணேஷ் ராமன், கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, மண்டல மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X