பொது செய்தி

தமிழ்நாடு

வசூல் வேட்டையில் வருவாய் துறை அதிகாரிகள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை-முதல்வர் ஸ்டாலின் தொகுதியில், பட்டா மாறுதலுக்கு வருவோரிடம், வருவாய்த்துறை அதிகாரிகள், பேரம் பேசி லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.கொளத்துாரில் வசிக்கும் மக்கள் வருவாய்த் துறை தொடர்பான பிரச்னைகளுக்கு, அயனாவரம் தாலுகா அலுவலகத்தை நாடுகின்றனர். அங்கு, இந்த தொகுதி மக்களுக்காக பணிபுரியும் வருவாய்த் துறை துணை தாசில்தார் ஒருவர், பட்டா மாறுதல்

சென்னை-முதல்வர் ஸ்டாலின் தொகுதியில், பட்டா மாறுதலுக்கு வருவோரிடம், வருவாய்த்துறை அதிகாரிகள், பேரம் பேசி லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.கொளத்துாரில் வசிக்கும் மக்கள் வருவாய்த் துறை தொடர்பான பிரச்னைகளுக்கு, அயனாவரம் தாலுகா அலுவலகத்தை நாடுகின்றனர். அங்கு, இந்த தொகுதி மக்களுக்காக பணிபுரியும் வருவாய்த் துறை துணை தாசில்தார் ஒருவர், பட்டா மாறுதல் வேண்டி வருவோரிடம், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுதொடர்பாக கொளத்துார் தொகுதி மக்கள், முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு எழுதியும், நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒரே பகுதியில் உள்ள, சி.எம்.டி.ஏ., அங்கீகாரம் பெற்ற மனைகளுக்கு பட்டா வழங்குவதில், அயனாவரம் தாலுகா வருவாய் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.அதையும் மீறி கேட்போரை அலையவிட்டு, பேரம் பேசி பணம் பறிப்பதாகவும், குறிப்பிட்ட சில அதிகாரிகளின் நடவடிக்கையால், ஒட்டு மொத்த வருவாய் துறைக்குமே அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், அதிருப்தி தெரிவித்தனர்.'முதல்வர் தொகுதியில் பணிபுரியும் அதிகாரிகளே, பொதுமக்களிடத்தில் வசூல் வேட்டை நடத்துகின்றனரே' என அங்கலாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X