பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.87 லட்சம் செலவில் உழவர் சந்தைகள்

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், 87 லட்சம் ரூபாய் செலவில், உழவர் சந்தைகள் புதுப்பொலிவு பெறுவதற்கு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அனுமதி அளித்து உள்ளது. மேலும், பல வசதிகளை செய்வதற்கு முன் வந்துள்ளது என, அத்துறையினர் தெரிவித்தனர்.தமிழகம் முழுதும், 50 உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்கு, 11.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வேளாண்
 ரூ.87 லட்சம் செலவில் உழவர் சந்தைகள்

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், 87 லட்சம் ரூபாய் செலவில், உழவர் சந்தைகள் புதுப்பொலிவு பெறுவதற்கு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அனுமதி அளித்து உள்ளது. மேலும், பல வசதிகளை செய்வதற்கு முன் வந்துள்ளது என, அத்துறையினர் தெரிவித்தனர்.தமிழகம் முழுதும், 50 உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்கு, 11.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அனுமதி அளித்து உள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், நான்கு உழவர் சந்தை கட்டடங்கள், 87 லட்சம் ரூபாய் மதிப்பில், பல வித வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன.குறிப்பாக, காஞ்சிபுரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, அம்பத்துார் ஆகிய உழவர் சந்தை கட்டடங்களில், குடிநீர், கழிப்பறைகள், கடைகள் புனரமைத்தல், தரை தளத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பல வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.இந்த வசதிகள் மேம்படுத்தினால், தனியார் காய்கறி கடைகளுக்கு இணையாக புதுப்பொலிவு பெறும் என, வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேளாண் மற்றும் உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் உழவர் சந்தைகளில் சில வசதிகள் குறைவாக இருக்கிறது. அதை மேம்படுத்தும் வகையில், புதிய திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 87 லட்ச ரூபாய் செலவில், உழவர் சந்தை புது பொலிவு பெற பல வித வசதிகளை மேம்படுத்த உள்ளோம்.மேலும், குளிர்சாதனம் வசதியுடன்கூடிய குளிரூட்டும் மையம் கட்டப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202119:29:39 IST Report Abuse
Vittal anand rao. ம்ம் ஒதுக்கீடு செய்யுங்கள் துக்ளக் ராஜ்ஜிய தானே. உலவர் சந்தை தானே நடக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X