பொது செய்தி

தமிழ்நாடு

15ம் நுாற்றாண்டு சதி கல் கண்டெடுப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்-ஊத்துக்காடு கிராமத்தில், 14ம் நுாற்றாண்டு கல்வெட்டை தொடர்ந்து, 15ம் நுாற்றாண்டு சதி கல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவது:ஊத்துக்காடு கிராமத்தில், 14ம் நுாற்றாண்டு சதி கல் சமீபத்தில் கண்டெடுத்து உள்ளோம். பிற்கால சோழர் காலங்களில், ஒரு போர் வீரன் இறந்தால், அவரது மனைவி உடன் கட்டை ஏறும்

வாலாஜாபாத்-ஊத்துக்காடு கிராமத்தில், 14ம் நுாற்றாண்டு கல்வெட்டை தொடர்ந்து, 15ம் நுாற்றாண்டு சதி கல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவது:ஊத்துக்காடு கிராமத்தில், 14ம் நுாற்றாண்டு சதி கல் சமீபத்தில் கண்டெடுத்து உள்ளோம். பிற்கால சோழர் காலங்களில், ஒரு போர் வீரன் இறந்தால், அவரது மனைவி உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து உள்ளது.இதை நினைவுப்படுத்தும் விதமாக, சதி கல் நட்டு இருக்கலாம். அதேபோல், 15ம் நுாற்றாண்டு சதி கல்லும், கண்டெடுக்கப்பட்டு உள்ளது.இதில், வலதுபுறம் இறந்த வீரனின் உருவமும், இடதுபுறம் வீரனின் மனைவியின் வலக்கையில் மலரை ஏந்தி உள்ளார். அவரது கொண்டை, வலதுபுறம் சாய்ந்த நிலையில், காணப்படுகிறது. இது, விஜய நகர மன்னர்களின் காலத்தை சார்ந்த தாகும். ஒரே ஊரில், இரு நுாற்றாண்டு காலத்தின் சதி கற்கள் இருப்பது கூடுதல் சிறப்பு என, கூறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X