பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதியை அதிகரிக்க வேளாண் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்! 'அபேடா' தலைவர் தகவல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை வணிக மேம்பாட்டு இயக்ககம் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், வேளாண் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் (அபேடா.,) சார்பில், தமிழகத்தில் ஏற்றுமதி அதிகரிப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேற்று பல்கலை அரங்கில் நடந்தது.இதில், அபேடா தலைவர் அங்கமுத்து தலைமை வகித்து விவசாயிகள்,

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை வணிக மேம்பாட்டு இயக்ககம் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், வேளாண் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் (அபேடா.,) சார்பில், தமிழகத்தில் ஏற்றுமதி அதிகரிப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேற்று பல்கலை அரங்கில் நடந்தது.இதில், அபேடா தலைவர் அங்கமுத்து தலைமை வகித்து விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பேசினார்.இதில், அவர் பேசியதாவது:இந்தியாவில் இருந்து, அரிசி, கால்நடை இறைச்சி ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வேளாண் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், உணவு பொருட்கள், தோட்டக்கலை பொருட்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.ஏற்றுமதியை பொறுத்தவரையில், உரிய பயிற்சி பெற்று அதில் ஈடுபட வேண்டியது அவசியம். அபேடா., அமைப்பின் மண்டல மையம் சென்னை, கொச்சின் ஆகிய இடங்களில் உள்ளது.இதனை அவசியமுள்ளவர்கள் அணுகலாம். தமிழகம் முழுவதும் வேளாண் பல்கலையுடன் இணைந்து, ஏற்றுமதி அதிகரிப்பதற்கான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.கொரோனா காரணமாக, ஏற்றுமதியில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தான் சூழலால், இறக்குமதியில் பாதிப்பு உள்ளது உண்மை; இச்சூழல் விரைவில் சரியாகும்.ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, ஏற்றுமதியாளர்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோர் வளர்ச்சி ஆய்வக மேம்பாடு போன்ற செயல்பாடுகளில், தேவையான கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உற்பத்தியாளர்களின் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. இதில், பல்கலை துணைவேந்தர் குமார், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X