பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதி இன்றி கனிமங்களை இருப்பு வைக்க வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை!

Added : ஆக 27, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனுமதியின்றி கனிமங்களை இருப்பு வைப்பதும், நடைசீட்டு இன்றி லாரிகளில் கனிமங்களை ஏற்றிச் செல்வதும், குவாரிகளில் விதிமீறலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் தாலுகாவில் அதிகளவில் குவாரிகளும், கிரஷர்களும் செயல்படுகின்றன. மாவட்ட
அனுமதி இன்றி கனிமங்களை இருப்பு வைக்க வேண்டாம் கலெக்டர்  எச்சரிக்கை!

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனுமதியின்றி கனிமங்களை இருப்பு வைப்பதும், நடைசீட்டு இன்றி லாரிகளில் கனிமங்களை ஏற்றிச் செல்வதும், குவாரிகளில் விதிமீறலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் தாலுகாவில் அதிகளவில் குவாரிகளும், கிரஷர்களும் செயல்படுகின்றன. மாவட்ட அளவில் 43 கல் குவாரிகளும், 189 கிரஷர்களும் செயல்படுகின்றன.கல் குவாரிகளில், அவ்வப்போது நடைபெறும் விபத்துகளால் உயிர் பலி ஏற்படுகிறது. இந்தாண்டு மட்டும், உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள இரண்டு குவாரிகளில் விபத்துகள் நடந்துள்ளன.இவற்றில், மணல் சரிந்து மூடி, ஒருவர் இறந்தார். குவாரிகளில் விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால், கிராமவாசிகளின் புகார் மீது, கனிமவளத் துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.இதற்கிடையே, ஒரு மாதத்திற்கு முன், உத்திரமேரூர் கல் குவாரிகளில், கலெக்டர் ஆர்த்தி நேரில் ஆய்வு செய்தார். கல் குவாரிகளும், கிரஷர்களும் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தியிருந்தார்.இந்நிலையில், கல் குவாரிகளுக்கும், கிரஷர்களுக்கும், கலெக்டர் ஆர்த்தி விடுத்துள்ள எச்சரிக்கை விபரம்:அனுமதியின்றி கனிமம் வெட்டியெடுத்தல், எடுத்துச் செல்லுதல் மற்றும் கனிமங்களை இருப்பு வைத்தல் ஆகியவை, கனிம முகவர் விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு மற்றும் கல் அரைக்கும் அரைவை இயந்திரம் அமைத்து தொழில் செய்ய, மாவட்ட கலெக்டரிடம் பதிவு செய்யப்பட வேண்டும்.அவ்வாறு அனுமதியின்றி கனிம இருப்பு கிடங்குகள் அமைத்து செயல்படுவது குற்றமாகும். எனவே, சட்டப்படி, கலெக்டரிடம் விண்ணப்பம் அளித்து, கனிம இருப்பு கிடங்கை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.மேலும், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கனிம இருப்பு அனுமதிதாரர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டை கனிமம் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுனரிடம் தவறாமல் வழங்க வேண்டும்.வாகன ஓட்டுனர் அங்கீகரிக்கப்பட்ட கனிம முகவர்களிடமிருந்து, ஜல்லி, எம் - சாண்டு மற்றும் இதர கனிமங்களை அனுமதி சீட்டு பெற்று, தார்பாய் கொண்டு, நன்கு மூடி பொதுமக்கள் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி கொண்டு செல்ல வேண்டும்.தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உத்தரவில் கூறியுள்ளவாறு, காலை, 7.00 மணி முதல், மாலை, 5.00 மணி வரை மட்டுமே உரிமம் வழங்கப்பட்ட பரப்பில் குவாரி பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும், குவாரியிலிருந்து கனிமம் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு, நடைச்சீட்டில் உள்ள விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு வாகன ஒட்டுனரிடம் வழங்க வேண்டும்.வாகனத்தில் உரிய அனுமதியின்றி கனிமம் எடுத்துச் செல்வது மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வது ஆகியவை கண்டறியப்பட்டால், அபராதத்துடன் அதிகப்பட்ச தண்டனையாக, ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அச்சுறுத்தல்உத்திரமேரூர் தாலுகாவில் செயல்படும் பெரும்பாலான கல் குவாரிகளில், கிரஷர்களில் இருந்து வரும் கனரக லாரிகள், வாலாஜாபாத் ரவுண்டானா வழியாகவே, தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றன.வாலாஜாபாத் பேரூராட்சியில், இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள், வாலாஜாபாத் ரவுண்டானா வழியாகவே பள்ளிக்கு செல்வர்.பள்ளி திறக்க உள்ள நிலையில், காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரையும், கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.கனரக வாகனங்கள், மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவே அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X