பொது செய்தி

தமிழ்நாடு

திருப்போரூர் பஸ் நிலையமா இருசக்கர வாகன நிறுத்தமா?

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்போரூர்-திருப்போரூர் பேருந்து நிலையத்தில், தனியார் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அரசு பேருந்துகள் உள்ளே செல்லவும், நிறுத்தவும் இடையூறு ஏற்படுகிறது.திருப்போரூர் பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்த முடியும். மேலும், பயணியர் வசதிக்காக 30க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.இங்கிருந்து, தாம்பரம், தி.நகர்,

திருப்போரூர்-திருப்போரூர் பேருந்து நிலையத்தில், தனியார் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அரசு பேருந்துகள் உள்ளே செல்லவும், நிறுத்தவும் இடையூறு ஏற்படுகிறது.திருப்போரூர் பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்த முடியும். மேலும், பயணியர் வசதிக்காக 30க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.இங்கிருந்து, தாம்பரம், தி.நகர், பிராட்வே, கோயம்பேடு, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில், கட்டணம் செலுத்தி, இருசக்கர வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பேர், அதில் நிறுத்தாமல், பேருந்து நிலையத்தில் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால், அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்தின் உள்ளே வருவதற்கும், நிறுத்துவதற்கும் இடையூறு ஏற்படுகிறது.எனவே, இருசக்கர வாகன ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு பேருந்துகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X