தொழில்முனைவோர் யோசனைகள் நிறைவேறுமா?விசைத்தறி விசை பெறட்டும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்முனைவோர் யோசனைகள் நிறைவேறுமா?விசைத்தறி 'விசை' பெறட்டும்!

Added : ஆக 27, 2021
Share
பல்லடம்:''விசைத்தறி தொழில் வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப, தாங்கள் முன்வைத்த யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்கின்றனர், விசைத்தறியாளர்கள்.திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, 6 லட்சம் விசைத்தறிகள் மூலம், பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும்

பல்லடம்:''விசைத்தறி தொழில் வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப, தாங்கள் முன்வைத்த யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்கின்றனர், விசைத்தறியாளர்கள்.திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, 6 லட்சம் விசைத்தறிகள் மூலம், பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர். சமீபகாலமாக, விசைத்தறி தொழிலில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கடந்த பார்லிமென்ட், சட்டசபை தேர்தலின்போது பல்வேறு கட்சியினரும் வாக்குறுதி அளித்தனர்.பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, விசைத்தறி ரக ஒதுக்கீடு செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார். சட்டசபை தேர்தலின்போதும், இதே கோரிக்கையை முன்வைத்து வாக்குறுதி அளிக்கப்பட்டது.இன்று வரை கோரிக்கைகள் வெறும் கானல் நீராகவே உள்ளன. ரக ஒதுக்கீடு, விசைத்தறி ஜவுளி சந்தை, குடும்ப மருத்துவ காப்பீடு, தானியங்கி தறிகளை அரசே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மத்திய அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றி விசைத்தறிகளை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான மனு, மத்திய இணை அமைச்சர் முருகனிடம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பிரதான கோரிக்கைகள் விசைத்தறி ரக ஒதுக்கீடு விசைத்தறி ஜவுளி சந்தை குடும்ப மருத்துவ காப்பீடு தானியங்கி தறி வழங்குதல்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X