பொது செய்தி

தமிழ்நாடு

தடம்புரண்ட வாழ்க்கை; தடம் மாற்றியது முயற்சி : மத்திய அரசு பயிற்சியால், தலைநிமிர்ந்த பெண்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர்;கொரோனா, கம்மங்கூழ் வியாபாரியான பெண்ணின் வாழ்க்கையை, திசை தெரியாமல், புரட்டிப்போட்டது; மத்திய அரசு அளித்த பயிற்சி மூலம், பனியன் நிறுவன டெய்லராக மாறிய இவர், வாழ்க்கைச்சவாலை எளிதாக எதிர்கொள்ள ஆயத்தமாகியிருக்கிறார்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள திருக்களஞ்சியை சேர்ந்தவர் வெங்கடாசலம்; இவரது மனைவி ஜோதி; இரு மகள்கள் உள்ளனர். குடும்ப வருவாய்க்காக,
 தடம்புரண்ட வாழ்க்கை; தடம் மாற்றியது முயற்சி : மத்திய அரசு பயிற்சியால், தலைநிமிர்ந்த பெண்

திருப்பூர்;கொரோனா, கம்மங்கூழ் வியாபாரியான பெண்ணின் வாழ்க்கையை, திசை தெரியாமல், புரட்டிப்போட்டது; மத்திய அரசு அளித்த பயிற்சி மூலம், பனியன் நிறுவன டெய்லராக மாறிய இவர், வாழ்க்கைச்சவாலை எளிதாக எதிர்கொள்ள ஆயத்தமாகியிருக்கிறார்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள திருக்களஞ்சியை சேர்ந்தவர் வெங்கடாசலம்; இவரது மனைவி ஜோதி; இரு மகள்கள் உள்ளனர். குடும்ப வருவாய்க்காக, சென்னிமலை, ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாதை கருப்பணசாமி கோவில் அருகே, தள்ளுவண்டியில், ஜோதி, கம்மங்கூழ் விற்றுவந்தார். தொற்று பரவல், ஊரடங்கு கட்டுப்பாடு, பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது; ஜோதி, இதற்கு விதிவிலக்கல்ல. கம்மங்கூழ் விற்க முடியவில்லை.எப்படி குடும்ப பாரம் சுமப்பது என, கவலைப்பட்ட ஜோதிக்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் 'சமர்த்' திட்டம், புதிய பாதையை காட்டியது.ஜோதி கூறியதாவது:தொற்று பரவலால் கடைய நடத்த முடியல; பலரும், கம்மங்கூழ் வாங்கி குடிக்க தயங்கினாங்க. எனக்கு தெரிஞ்சது, இந்த தொழில்தான்; மனசு ஒடிஞ்சு போனேன்.அப்பதான், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மூலம், மத்திய அரசின் 'சமர்த்' திட்டத்துல, இலவச தையல் பயிற்சி அளிக்கற விஷயம் தெரிஞ்சுது. சென்னிமலை மையத்துக்கு, விண்ணப்பிச்சேன். தொற்று முதல் அலையாலே, கடந்த ஆண்டு பயிற்சி பெறமுடியல.இந்தாண்டு, மார்ச் மாதம் பயிற்சியில சேர்ந்தேன்; தையல் நுணுக்கங்களை கத்துக்கிட்டேன். 38 நாள் பயிற்சிக்கு பிறகு, ஏப்ரல் கடைசில டெஸ்ட் வச்சாங்க. அதுல வெற்றி பெற்றேன்; பயிற்சி முடிஞ்ச உடனேயே, திருப்பூர் பனியன் கம்பெனில, டெய்லரா, அவங்களே வேலை வாங்கிக்கொடுத்துட்டாங்க...தையல்னா என்னன்னே தெரியாது. 'சமர்த்' திட்ட பயிற்சினாலே, வேலைக்கு சேர்ந்த மொத நாளே, தைரியமா, ஆடைல, 'லேபிள்' வச்சு தைக்க துவங்கீட்டேன். இப்ப, சென்னிமலை அருகே, எல்லைக்காடுங்கற இடத்துல இருக்கற கம்பெனில, ஓவர்லாக் டெய்லரா வேலை பாக்கறேன்.தினம் 500 ரூபாய் சம்பாதிக்கிறேன். முறையான பயிற்சி, கவர்மென்ட் வழங்குன சான்றுனாலே, மனசுல பயம் போயிருச்சு; தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கற நிலைக்கு விரைவில் வந்துடுவேன்கற நம்பிக்கை இருக்கு.கம்மங்கூழ் விற்பனை, கோடைக்காலத்துல நாலு மாசம் தான் நல்லா இருக்கும். அப்புறம் கஷ்டப்பட வேண்டியிருந்துச்சு. இப்ப ஆண்டு முழுக்க வேலையும், சம்பளமும் உறுதியாயிடுச்சு. என்னை போன்று எல்லா பெண்களும், தையல் பயிற்சி பெறணும்; ஆண்களுக்கு நிகரா சாதிச்சுக்காட்டவும் முடியும்.இவ்வாறு, ஜோதி கூறினார். அவரது முகத்தில், 'நம்பிக்கை ஒளி'.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X