ரேஷன் பொருள்வாங்காமலே, எஸ்.எம்.எஸ்.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருள்வாங்காமலே, எஸ்.எம்.எஸ்.,

Added : ஆக 27, 2021
Share
பல்லடம் அருகே, செஞ்சேரிப்புத்துாரை சேர்ந்தவர் கணேசன், 40. புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்த கணேசனுக்கு, கடந்த வாரம் 'ஸ்மார்ட் கார்டு' கிடைத்தது.ரேஷன் கடையில், அடுத்த மாதம் தான் பொருள் வாங்க முடியும் என்று விற்பனையாளர் கூறினார். பொருள் வாங்காத நிலையில், நேற்று கணேசனின் அலைபேசி எண்ணுக்கு, ரேஷன் பொருட்கள் வாங்கப்பட்டதாக 'குறுஞ்செய்தி' வந்தது.கணேசன் கூறுகையில்,
 ரேஷன் பொருள்வாங்காமலே, எஸ்.எம்.எஸ்.,

பல்லடம் அருகே, செஞ்சேரிப்புத்துாரை சேர்ந்தவர் கணேசன், 40. புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்த கணேசனுக்கு, கடந்த வாரம் 'ஸ்மார்ட் கார்டு' கிடைத்தது.ரேஷன் கடையில், அடுத்த மாதம் தான் பொருள் வாங்க முடியும் என்று விற்பனையாளர் கூறினார். பொருள் வாங்காத நிலையில், நேற்று கணேசனின் அலைபேசி எண்ணுக்கு, ரேஷன் பொருட்கள் வாங்கப்பட்டதாக 'குறுஞ்செய்தி' வந்தது.கணேசன் கூறுகையில், 'புகார் எண்ணில் தொடர்பு கொண்டால் அழைப்பு ஏற்கப்படவில்லை'' என்றார். சூலுார் வட்ட வழங்கல் அலுவலர் பழனிகுமாரிடம் கேட்டதற்கு, 'பொருள் வாங்காமல் குறுஞ்செய்தி வர வாய்ப்பு இல்லை; புகார் அடிப்படையில் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.இந்நிலையில், கணேசனின் மனைவி கண்ணம்மாளிடம் ரேஷன் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X