பொது செய்தி

தமிழ்நாடு

பனியன் தொழிலாளர் சம்பளம்; இன்று 4ம் சுற்று பேச்சு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் - தொழிற்சங்கங்கள் இடையே நான்காம் சுற்று சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.திருப்பூர் பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள்; எட்டு பனியன் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.90 சதவீத சம்பள உயர்வு; 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு

திருப்பூர்:ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் - தொழிற்சங்கங்கள் இடையே நான்காம் சுற்று சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.திருப்பூர் பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள்; எட்டு பனியன் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.90 சதவீத சம்பள உயர்வு; 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும் 30 பைசா பஞ்சப்படி உயர்வு வேண்டும் என்பது, தொழிற் சங்க தரப்பினரின் பிரதான கோரிக்கை. 24 சதவீத சம்பள உயர்வு; 14.4 பைசா பஞ்சப்படி உயர்வு வழங்க, ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் சம்மதித்துள்ளன.தொடர்ந்து இதே நிலைப்பாட்டில் உற்பத்தியாளர் சங்கங்கள் உறுதியாக இருந்ததாலும், தொழிற்சங்கங்கள் இதற்கு உடன்படாததாலும், பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.கடந்த 4ம் தேதி முதல் இதுவரை, இருதரப்பினர் இடையே, மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட பேச்சு, 'சைமா' அரங்கில் இன்று மாலை, 5:30 மணிக்கு, பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற உள்ளது.உற்பத்தியாளர் சங்கங்கள் 24 சதவீதத்திலேயே ஸ்திரமாக இருக்க போகின்றனவா, கூடுதல் சம்பள உயர்வு வழங்க உடன்படுகின்றனவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உற்பத்தியாளர் சங்கங்கள் வழங்க முன்வரும் சம்பள உயர்வு, தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளும்வகையில் அமைவதை பொறுத்து,பேச்சுவார்த்தையின் போக்கு அமையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X