பொது செய்தி

தமிழ்நாடு

அனுப்பர்பாளையத்தில் , டஸ்கி பர்னிச்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது கிளை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், டஸ்கி பர்னிச்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது கிளை, அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையத்தில் நேற்று திறக்கப்பட்டது.திருப்பூர் காங்கயம் ரோட்டில் இயங்கி வரும் டஸ்கி பர்னிச்சர்ஸ் நிறுவனம், தனது இரண்டாவது கிளையை திருமுருகன் பூண்டியில் அமைத்துள்ளது; அவிநாசி ரோடு அனுப்பர்பாளையத்தில் இதன் மூன்றாவது கிளை நேற்று திறக்கப்பட்டது; மஜோக் எலைட் குரூப்

திருப்பூர்:திருப்பூரில், டஸ்கி பர்னிச்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது கிளை, அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையத்தில் நேற்று திறக்கப்பட்டது.திருப்பூர் காங்கயம் ரோட்டில் இயங்கி வரும் டஸ்கி பர்னிச்சர்ஸ் நிறுவனம், தனது இரண்டாவது கிளையை திருமுருகன் பூண்டியில் அமைத்துள்ளது; அவிநாசி ரோடு அனுப்பர்பாளையத்தில் இதன் மூன்றாவது கிளை நேற்று திறக்கப்பட்டது; மஜோக் எலைட் குரூப் நிறுவனங்களின் தலைவர் அப்துல் மஜீத் ரிப்பன் வெட்டி புதிய ேஷாரூமை திறந்து வைத்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் குத்து விளக்கேற்றினார். நிறுவன உரிமையாளர் விக்னேஷ், அவரது மனைவி சூர்யா ஆகியோர் வரவேற்றனர். விக்னேஷ் பெற்றோர் சம்பத்- மணி விஜயா முன்னிலை வகித்தனர்.டஸ்கி பர்னிச்சர்ஸ் உரிமையாளர் விக்னேஷ் கூறுகையில், ''திருப்பூர் பகுதி வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்று இயங்கி வரும் எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர் ஆதரவுடன் மூன்றாவது கிளையை துவங்கியுள்ளோம்.கேரளாவில் உள்ள ஆலையில், உற்பத்தி செய்யப்படும் உயர்தர தேக்கு மரத்திலான அனைத்து வகை நவீன மாடல் பர்னிச்சர்கள் நேரடியாக இங்கு விற்கப்படுகின்றன. ேஷாபா செட், டீபாய், சேர்கள், டைனிங் டேபிள், டிரஸ்சிங் டேபிள், வார்ட் ரோப், ஊஞ்சல் இருக்கைகள், கட்டில்கள் உள்ளிட்ட பர்னிச்சர் வகைகள் பல்வேறு டிசைன்களில் நியாயமான விலையில் கிடைக்கும். புதிய கிளை திறப்பு விழா சலுகையாக அனைத்து பர்னிச்சர் ரகங்களுக்கும் 5 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது; ஜீரோ சதவீத வட்டியில் எளிய மாத தவணை, பஜாஜ் நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X