பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரியம் இழுத்தடிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு இரண்டு ஆண்டாகியும், ஏதேதோ காரணங்களை கூறி மின் வாரியம் இழுத்தடித்து வருகிறது; இந்நிலையில், 15 சென்ட் இடம் கொடுத்தால்தான் மின் இணைப்பு கொடுக்க முடியும் என்ற மின் வாரிய அதிகாரியின் 'பேரம்' பேசும் ஆடியோ' வெளியாகியுள்ளது.திருப்பூர் நல்லாத்துப்பாளையம், அத்திமர தோட்டத்தை சேர்ந்த சம்பத்குமார், 64. தொட்டிபாளையம்

திருப்பூர்:திருப்பூரில், வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு இரண்டு ஆண்டாகியும், ஏதேதோ காரணங்களை கூறி மின் வாரியம் இழுத்தடித்து வருகிறது; இந்நிலையில், 15 சென்ட் இடம் கொடுத்தால்தான் மின் இணைப்பு கொடுக்க முடியும் என்ற மின் வாரிய அதிகாரியின் 'பேரம்' பேசும் ஆடியோ' வெளியாகியுள்ளது.

திருப்பூர் நல்லாத்துப்பாளையம், அத்திமர தோட்டத்தை சேர்ந்த சம்பத்குமார், 64. தொட்டிபாளையம் கிராமத்தில், இவர் கட்டியுள்ள வீட்டுக்கு மின் இணைப்பு வாங்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார். எல்லை மாறி விண்ணப்பித்ததாக கூறியதையடுத்து, ஆர்.கே., நகர் மின் அலுவலகத்தில் கடந்த ஜன., 20ம் தேதி, ஆன்லைன் வாயிலாக, 81, 420 ரூபாய் மற்றும் மின் கம்பம் அமைக்க, 8, 368 ரூபாயையும் இவர் செலுத்தியுள்ளார்.சம்பத்குமார் கூறுகையில், ''அதிகாரிகள் கேட்கும் ஒவ்வொரு ஆவணங்களையும் வழங்கியும், இணைப்பு கொடுக்காமல், அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தட்டி கழிப்பதில் குறியாக உள்ளனர். சர்க்கரை நோய் காரணமாக, எனது இடது காலையும் இழந்து, மனைவியும் இறந்த நிலையில், திருமண வயதில், இரண்டு பெண்களை வைத்து கொண்டு மிகுந்த சிரமப்படுகிறேன்'' என்கிறார்.'பேரம்' பேசும் அதிகாரி!மின் இணைப்பு தொடர்பாக, மின் அதிகாரி ஒருவர், சம்பத்குமாரின் மகள் ருத்ரபிரியாவிடம் மொபைல் போனில் பேசும் 'ஆடியோ' வெளியாகியுள்ளது.

அதில், ''மின் இணைப்பு வழங்க ஆட்சேபனை செய்யும் தரப்பினர், இது பொது வழி அல்ல. அரசுக்கு வழங்கவில்லை என்கின்றனர். வழிப்பாதை உள்ளிட்ட எல்லாம் சேர்த்து, 15 சென்ட் அளவுக்கு வருகிறது. அந்த இடத்தை அவர்கள் கொடுத்தால், நாங்கள் ஆட்சேபனை செய்ய மாட்டோம் என்று சொல்கின்றனர். நீங்கள் கோர்ட், வழக்கு என போகாமல் முடிக்க, இது தான் எளிதான வழி,'' என்று ருத்ரபிரியாவிடம் கூறுகிறார், அந்த அதிகாரி.உதவி பொறியாளர் ஜானிடம் கேட்டதற்கு, ''மின்கம்பத்தில் இருந்து மின்ஒயர் எடுக்கும் போது, வேறு இடம் வழியாக செல்லும். அவர்கள் ஆட்சேபனை செய்கின்றனர். எதிர்தரப்பினர் இடம் கேட்டதாக, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம், தெரிவித்தேன். அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டு தரப்பிலும், ஆவணங்கள் சரியாக இருந்தால், மின் இணைப்பு வழங்கப்படும்,'' என்றார்.மலை பகுதி, மின்சாரமே இல்லாத கிராமங்களுக்கு அரசு மின் இணைப்பு வழங்கி வருகிறது என அரசு 'மார் தட்டுகிறது'. ஆனால், மாநகராட்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்பது, அதிகாரிகளுக்கு 'தலைகுனிவு' தரும் விஷயமாகும். கலெக்டர் நேரடியாக தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X