சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடைகள் திறப்பு விவகாரம்: காத்திருந்து சென்ற வியாபாரிகள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நிலுவை வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நேற்று முன்தினம், 736 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. நேற்று, மார்க்கெட்டில், உள்ள, 13 நுழைவு வாயில் கேட்கள் பூட்டப்பட்டு, ஏ.டி.எஸ்.பி., மோகன் நிவாஷ் தலைமையில் போலீசார் கண்காணித்து வந்தனர்.'இப்பிரச்னை தீர்வு காணும் வகையில், சென்னையில்

ஊட்டி:ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நிலுவை வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நேற்று முன்தினம், 736 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. நேற்று, மார்க்கெட்டில், உள்ள, 13 நுழைவு வாயில் கேட்கள் பூட்டப்பட்டு, ஏ.டி.எஸ்.பி., மோகன் நிவாஷ் தலைமையில் போலீசார் கண்காணித்து வந்தனர்.'இப்பிரச்னை தீர்வு காணும் வகையில், சென்னையில் இருந்து, ஊட்டி, எம்.எல்.ஏ., கணேஷ் மூலமாக, சாதகமான தகவல் வரும்,'என, வியாபாரிகள் மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.நகராட்சி கமிஷனர் சரஸ்வதி கூறுகையில், ''வியாபாரிகள் யாரும் நிலுவை வாடகை செலுத்தவில்லை. அரசிடமிருந்தும் மாலை வரை தகவலும் வரவில்லை. நிலுவை வாடகை செலுத்தினால் கடைகள் திறக்க தயாராக உள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X