வன உயிரினங்களுக்கு உணவு வழங்கினால் அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன உயிரினங்களுக்கு உணவு வழங்கினால் அபராதம்

Added : ஆக 27, 2021
Share
கூடலுார்:முதுமலை புலிகள் காப்பக சாலையோரங்களில், புள்ளி மான், மயில், குரங்கு, நீலகிரி லங்கூர் போன்ற போன்ற வன உயிரினங்கள் அதிக அளவில் உலா வருகின்றன.இவைகளுக்கு, 'உணவு கொடுக்கவோ, உணவுப்பொருட்களை சாலையோரங்களில் வீசி செல்ல கூடாது,' என, வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.எனினும், சில பயணிகள் வாகனங்களை நிறுத்தி, வன உயிரினங்களுக்கு உணவு கொடுத்து, அதனை 'போட்டோ'எடுத்து

கூடலுார்:முதுமலை புலிகள் காப்பக சாலையோரங்களில், புள்ளி மான், மயில், குரங்கு, நீலகிரி லங்கூர் போன்ற போன்ற வன உயிரினங்கள் அதிக அளவில் உலா வருகின்றன.இவைகளுக்கு, 'உணவு கொடுக்கவோ, உணவுப்பொருட்களை சாலையோரங்களில் வீசி செல்ல கூடாது,' என, வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.எனினும், சில பயணிகள் வாகனங்களை நிறுத்தி, வன உயிரினங்களுக்கு உணவு கொடுத்து, அதனை 'போட்டோ'எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனால், சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் உணவுகளை எதிர்பார்த்து, சாலையோரம் காத்திருக்கும் குரங்கு உட்பட பிற உயிரினங்கள், வாகனங்களில் அடிபடும் அபாயமும் உள்ளது.வனத்துறையினர் கூறுகையில்,'வன உயிரினங்களுக்கு உணவு கொடுப்பதும், உணவு பொருட்கள், குப்பையை சாலையோரம் வீசி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X