பொது செய்தி

தமிழ்நாடு

வயநாட்டில் அதிகரிக்கும் கொரோனா: எல்லையோர கிராம மக்கள் அச்சம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
பந்தலுார்:கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தற்போது நோய் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி மொத்த பரிசோதனையில், 23 சதவீதம் பேருக்கு நோய்தொற்று ஏற்படும் நிலையில், நாள் ஒன்றுக்கு, 1,000 பேருக்கு குறையாமல் கொரோனா பாதித்து

பந்தலுார்:கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தற்போது நோய் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி மொத்த பரிசோதனையில், 23 சதவீதம் பேருக்கு நோய்தொற்று ஏற்படும் நிலையில், நாள் ஒன்றுக்கு, 1,000 பேருக்கு குறையாமல் கொரோனா பாதித்து வருகிறது.இந்நிலையில், தமிழக எல்லையான பாட்டவயல், நம்பியார் குன்னு பகுதிகளில், தமிழக எல்லைக்குள் கேரள மாநில பஸ்கள் வந்து செல்கின்றன. தாளூர் பகுதியில் மாநில எல்லை வரை வரும் கேரள மாநில பஸ்களில் வரும் பயணிகளுக்கு எவ்வித பரிசோதனையும் இல்லை. இதனால், நீலகிரியில் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எல்லையில் வாழும் நீலகிரி மக்கள் கூறுகையில்,'தமிழக எல்லைக்குள், கேரள மாநில பஸ்கள் வருவதை தடை செய்யவும், கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் பயணிகளை முழுமையான பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X